ரூ. 67 கோடி மதிப்பீட்டில் 6 புதிய தொழிற்பேட்டைகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை, செப். 16 - தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறு வனம் சார்பில், ரூ. 67.34 கோடி மதிப்பீட்டில் 4 புதிய தொழிற்பேட்டைகள், 2 தனி யார் தொழிற்பேட்டைகள், கழிவுநீர் சுத்தி கரிப்பு நிலையம், பொது வசதி மையம் ஆகி யவற்றை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செவ்வாயன்று திறந்து வைத்தார். மேலும், ரூ.78.57 கோடி மதிப்பீட்டில் தொழிலாளர்கள் தங்கும் விடுதி, வேளாண் பொருட்கள் உற்பத்திக்கான உட் கட்டமைப்பு வசதிகள், 18 தொழிற்பேட்டை களின் உட்கட்டமைப்பு வசதி மேம்பாடு போன்ற பணிகளுக்கு அடிக்கல்லும் நாட்டினார். சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (செப்.17) நடை பெற்ற நிகழ்ச்சியில், திருவள்ளூர், திரு நெல்வேலி, திருவாரூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 28.33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 77.86 ஏக்கரில் உருவாக்கப்பட்ட நான்கு புதிய தொழிற் பேட்டைகளை முதலமைச்சர் திறந்து வைத்தார். கடலூர் மாவட்டம், மருதாடில் 3.60 கோடி ரூபாயில் 11.57 ஏக்கரில் புதிய தனியார் தொழிற்பேட்டை, கோயம்புத் தூர் மாவட்டம், கிட்டாம்பாளையம் அறி ஞர் அண்ணா கூட்டுறவு தொழிற்பேட்டை யில் ரூ. 24.61 கோடியில் அடிப்படை உட்க ட்டமைப்பு வசதிகள், காஞ்சிபுரம் மாவட்டம் திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையில் ரூ. 2.60 கோடி மதிப்பீட்டில் பொதுக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் 8.20 கோடியில் உணவுப் பதப்படுத்துதல் குழுமத்திற்கான பொது வசதி மையம் என மொத்தம் 67.34 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார். திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையில் ரூ.29.27 கோடியில் மூன்று தளங்களுடன் தொழிலாளர்கள் தங்கும் விடுதி, பெருந்துறை சிட்கோ தொழிற்பேட்டையில் வேளாண் பொருட்கள் உற்பத்தி சார்ந்த தொழில் முனைவோர்க்கு ரூ. 15.23 கோடி மதிப்பீட்டில் 17.95 ஏக்கரில் மேம்பாட்டுப் பணிகள் மற்றும் 18 தொழிற்பேட்டைகள் உட்கட்டமைப்பு வசதி மேம்பாட்டிற்கு ரூ. 34.07 கோடியில் திட்டப்பணிகள் என மொத்தம் ரூ.78.57 கோடி மதிப்பிலான 20 திட்டப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.