tamilnadu

img

உலகை உலுக்கிய ஆழிப்பேரலை 20 ஆம் ஆண்டு நினைவு தினம் கடைப்பிடிப்பு

மயிலாடுதுறை/நாகப்பட்டினம், டிச.26 - 2004 டிசம்பர் 26 தமிழக கடலோர  மாவட்டங்களை ஆழிப் பேரலை தாக்கியது. அதன் 20 ஆவது ஆண்டு  நினைவு தினம் டெல்டா மாவட்டங் களின் மீனவ கிராமங்களில் வியா ழனன்று கடைப்பிடிக்கப்பட்டது. சுனாமி நினைவு தினத்தை யொட்டி, மயிலாடுதுறை மாவட்டத்தி லுள்ள கடலோரக் கிராமங்களில் அமைதி பேரணிகள் மற்றும் நினை விடங்களில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடை பெற்றது. தரங்கம்பாடியில் 315 பேர் சுனாமி யால் உயிரிழந்த நிலையில், தரங்கம் பாடி மீன் ஏலக் கூடத்திலிருந்து ஆயிரக் கணக்கானோர் அமைதி ஊர்வலமாக புறப்பட்டு ரேணுகாதேவி அம்மன் ஆலயம், இராஜவீதி, நுழைவு கேட்,  மெயின்ரோடு வழியாக வட்டாட்சி யர் அலுவலக சாலையில், உயிரிழந்த வர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். 20 ஆண்டுகளை கடந்தாலும் சுனாமி யில் பறிகொடுத்த உறவுகளை நினைத்து மீனவ மக்கள் கண்ணீர் சிந்திய காட்சிகள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அதே போன்று  சந்திரபாடி, பூம்புகார், வானகிரி, திரு முல்லைவாசல் உள்ளிட்ட அனைத்து  மீனவக் கிராமங்களிலும் சுனாமி நினைவு தின நிகழ்வுகள் நடைபெற்றன. பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சுதா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ். பவுன்ராஜ், தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுணசங்கரி குமரவேல் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கத்தைச் சேர்ந்த தலைவர்கள், மீனவ பஞ்சாயத்தார்கள், வர்த்த கர்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள் அமைதி  பேரணி மற்றும் நினைவு அஞ்சலி  செலுத்தும் நிகழ்வுகளில் பங்கேற்றனர். 

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 16 மீனவ கிராமங்கள் மிகப்பெ ரிய தாக்குதலுக்கு உள்ளாகின. 5  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இன்னு யிர் நீத்தனர். ஆயிரத்திற்கும் மேற் பட்டோர் மனநலம் பாதிக்கப்பட்டனர். ஏராளமானோர் ஊனமுற்றனர். இந்த ஆழிப்பேரலை மிகப்பெரிய பொருட் சேதத்தை ஏற்படுத்தியது. விவசாய நிலங்களுக்குள் உப்பு தண்ணீர் புகுந்து விவசாயம் மிகப்பெரிய அளவிற்கு பாதிக்கப்பட்டது. மீனவ  மக்கள் தங்களுடைய உயிர் மட்டு மல்லாது,  வீடுகள், தொழில் செய்ய பயன்படுத்தப்படும் பொருட்கள் என அனைத்து வாழ்வாதாரத்தையும் இழந்து நின்றனர்.  சுனாமி நினைவு தினத்தையொட்டி, நாகை மாவட்ட ஆட்சியர் வளாகத் தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடை பெற்றது. ஆட்சியர் வளாகத்தில் உள்ள நினைவு தூணில் நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் மலர்  வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி னார். அதனைத் தொடர்ந்து கீழ்வேளூர்  சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி, தாட்கோ தலைவர் உ.மதிவாணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் அஞ்சலி  செலுத்தினர்.