2 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்பு
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக நீதிபதிகள் ஆர்.சக்திவேல் மற்றும் பி.தனபால் ஆகியோர் கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் நியமிக்கப் பட்டனர். இவர்கள் இருவரையும் நிரந்தர நீதிபதிகளாக நிய மிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் அளித்த பரிந்துரையை ஏற்று, ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, இருவருக்கும் தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து, நீதி பதிகளின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது. தற்போது, 10 நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக உள்ளது.
க்யூஆர் கோடு மூலம் காணிக்கை
சேலம்: சேலம் மாவட்டத்தில் 70 கோயில்களில் க்யூஆர் கோடு மூலம் உண்டியல்கள் காணிக்கை, நன்கொடை செலுத்தும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சேலம் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். காணிக் கையை எண்ணும்போது அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அற நிலையத் துறை உயர் அதிகாரிகள் கட்டாயம் இருக்க வேண்டும். அதை முழுக்க வீடியோவில் பதிவு செய்ய வேண்டும் என்று விதிமுறைகளில் உள்ளது.
மானிய விலையில் ‘லைஃப் ஜாக்கெட்’
சென்னை: “கடலில் மீன் பிடிக்கும் போது இயற்கை சீற்றங்கள் அல்லது விபத்து உள்ளிட்ட காரணங்களால் படகு கவிழ்ந்து அல்லது படகில் செல்லும் போது தவறி விழுந்து மீனவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. அதைத் தவிர்க்க, படகில் செல்லும் அனைவரும் கட்டாயம் உயிர் காக்கும் கவச உடையான ‘லைஃப் ஜாக்கெட்’டை அணிய வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, 14 கடலோர மாவட்டங் களைச் சேர்ந்த 10 ஆயிரம் நாட்டுப் படகு மீனவர்கள் பயன்பெறும் வகையில் லைஃப் ஜாக்கெட் வழங்கப்படும் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
3,000 கோவில்களில் கும்பாபிஷேகம்
சென்னை: தமிழகத்தில் இதுவரை 2,664 கோவில் களில் கும்பாபிஷேகம் முடிவுற்றுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த எண்ணிக்கை நிச்சயம் 3 ஆயிரத்தை தாண்டும். கடந்த நான்கு ஆண்டு காலத்தில் சுமார் 114 தேர்கள், ரூ.74 கோடி செலவில் புதிதாக உருவாக்கப் பட்டுள்ளது. சுமார் ரூ.16 கோடியில் 64 மரத்தேர்களை மரா மத்து செய்துள்ளோம். மேலும், 5 தங்கத்தேர் ரூ.31 கோடியில், 9 வெள்ளித்தேர் ரூ.29 கோடியில் புதிதாக செய்து வரு கிறோம். இத்துடன் ரூ.7,196 கோடி மதிப்பிலான 7,437 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டு உள்ளது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
முதல்வர் பெருமிதம்
சென்னை: இந்தியாவுக்கு முதலீடுகள் நுழைவு வாயி லாக தமிழ்நாடு திகழ்கிறது. இதனால், உலக நிறுவனங் களின் முதல் முகவரி தமிழ்நாடு தான் என முதலமைச்சர் பெருமிதத்துடன் தெரிவித்திருக்கிறார்.
தமிழ்நாடு வெல்லும்
சென்னை: கல்வியில் அரசியல் செய்யும் ஒன்றிய அரசை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள். என்ன பேசுகிறோம் என தெரிந்துதான் ஒன்றிய அமைச்சர் பேசு கிறாரா? அல்லது பேச சொல்வதை பேசுகிறாரா? என்று தனது எக்ஸ் தள பக்கத்தில் கேள்வி எழுப்பியிருக்கும் பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “எங்களை பொறுத்தவரை மும்மொழிக் கொள்கை என்பது ஆர்எஸ்எஸ் கொள்கை. அதை ஒருபோதும் ஏற்க மாட்டோம். எதிர்த்து தமிழ்நாடு போராடும்; தமிழ்நாடு வெல்லும்” என்றும் தெரிவித்திருக்கிறார்.
இறுதி விசாரணை
சென்னை: நானும் ரவுடிதான் படப்பிடிப்பு காட்சி களுக்காக ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கின் இறுதி விசார ணையை ஏப்.9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.
இன்று படகுகள் ஆய்வு
இராமேஸ்வரம்: கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா மார்ச் 14, 15 ஆகிய 2 நாட்கள் நடைபெறு கிறது. இந்த ஆலய திருவிழாவிற்கு இராமேஸ்வரத்தில் இருந்து 90 விசைப்படகுகளும், 22 நாட்டுப் படகுகளும் செல்ல பதிவு செய்துள்ளன. பதிவு செய்யப்பட்டுள்ள இந்த படகுகளில் மொத்தம் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் திரு விழாவிற்கு செல்ல உள்ளனர். இந்நிலையில், கச்சத்தீவு செல்ல உள்ள விசைப்படகு மற்றும் நாட்டுப் படகுகளை செவ்வாயன்று மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.
பால் உற்பத்தியாளர்களுக்கு இழப்பீடு, நிதி உதவி உயர்வு
சென்னை: பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு, நிதி உதவிகளை உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. பேரறிஞர் அண்ணா கூட்டுறவு பால் உற்பத்தி யாளர்கள் நல வாரியத்தின் விதிகளை திருத்தி தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித் துள்ளது. விபத்து மரணம் அடைந்தால் வழங்கப்படும் இழப்பீடு ரூ.2.50 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோன்று, கல்வி உதவித் தொகை, ஒரு பெண் குழந்தைக்கு வழங்கப்படும் திருமண உதவித்தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது.
வங்கிகள் 2 நாள் வேலைநிறுத்தம்
சென்னை: வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். தற்கா லிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். வங்கிகளில் வாரத்துக்கு 5 நாட்கள் வேலை நாளாக அறிவிக்க வேண்டும். பொதுமக்களின் தாக்குதலில் வங்கி அதி காரிகள் மற்றும் ஊழியர்களை பாதுகாக்க போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி மார்ச் 24, 25 தேதிகளில் 48 மணி வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று வங்கி தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
ஜாமீன் கேட்டு மனு
சென்னை: திருப்பதி கோவிலில் மொபைல் போன், வீடியோ கேமராக்களுக்கு அனுமதி கிடையாது. ஆனால், தரிசனத்திற்காக வரி சையில் நின்றிருந்த வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார் டி.டி.எஃப் வாசன். இதனால், அவர் மீது வழக்குப் பதிந்து திருமலை தேவஸ்தான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவரது வங்கிக் கணக்கை முடக்கியுள்ளனர். வாசனுக்கு முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருப்ப தாக அவரது வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார்.