125 நாள் வேலை என்பது ஒன்றிய அரசின் நவயுக நாடகம்
எம். சின்னதுரை எம்எல்ஏ சாடல் புதுக்கோட்டை, ஜன. 30 - மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித்திட்டத்தின் பெயரை மாற்றி 125 வேலை தருவோம் என்று ஒன்றிய ஆட்சியாளர்கள் சொல்வது நவயுக நாடகம் என அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் எம். சின்னதுரை எம்எல்ஏ. குற்றம் சாட்டியுள்ளார். மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தை முழுமையாக அமல்படுத்தக் கோரியும், விக்சித் பாரத் ஜி ராம் ஜி திட்டத்தை திரும்பப் பெறக்கோரியும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் மாநிலத் தலைவரும், கந்தர்வகோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான எம்.சின்னதுரை பேசுகையில், “மகாத்மா காந்தி படுகொலையில் 9 பேர் குற்றம் சாட்டப்பட்டனர். அதில் இருவருக்கு மரண தண்டனையும், 6 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட் டது. சதித் திட்டம் தீட்டப்பட்டதற் கான ஆதாரம் இல்லை என்று ஒருவர் விடுதலை செய்யப்படார். அந்த ஒருவர்தான் தற்பொழுது மதவெறிக் கூட்டத்தால் கொண்டாடப்படும் வி.டி.சாவர்க்கர். காந்தியைக் கொன்ற கோட்சேயின் அஸ்தியை இன்னமும் அவர்கள் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள். மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றி யதன் மூலம் அவர்கள் மீண்டும் ஒருமுறை தேசத் தந்தையை படு கொலை செய்து இருக்கிறார்கள். ஒன்றிய அரசு திட்டத்திற்கு ஒதுக்கும் நிதியை 60 விழுக்காடாக குறைத்து விட்டு 125 நாள் வேலை தருவேம் என்பது அவர்களின் நவயுக நடகம். சட்டத்தை திட்டமாக மாற்றி யதன் மூலம் விருப்பத்தின் பேரில் நிதிகொடுக்கலாம் என்று ஆகிறது. இது எவ்வளவு பெரிய அநீதி. சாதாரண மக்களிடம் பணம் புழங்கும் போதுதான் பொருளாதார சுழற்சி ஏற்பட்டு தொழில்துறைகள் வளர்ச்சி பெறும். நூறுநாள் வேலைத் திட்டம், மகளிர் உரிமைத் தொகை, மகளிருக்கான இலவசப் பேருந்து திட்டங்கள் மூலம் மக்க ளிடம் வாங்கும் சக்தி அதிகரித்து ள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்து ள்ளனர். திட்டத்தை மாற்றியதற்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் கொண்டுவந்து நிறை வேற்றப்பட்டுள்ளது பாராட்டுக்குரி யது. நாடு முழுவதும் 25 கோடிக்கும் அதிகமானோர் இத்திட்டத்தில் வேலை செய்கின்றனர். அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் ஏற்கெனவே உள்ள வேலை உறுதித்திட்டத்தை அமல் படுத்தக் கோரி அனைத்துப் பகுதி யினரும் ஒன்றிய அரசுக்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும். வரும் பிப்ரவரி 25 அன்று அனைத்து மாவட்ட ஆட்சியர் அலு வலகங்கள் முன்பாகவும் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெறும்’’ என்று குறிப்பிட்டார். முன்னதாக, ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் சி. பழனிவேலு தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் துரை.பாண்டி யன், ஏ. சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் டி.சலோமி, தலைவர் கே.சண்முகம், விவசாயி கள் சங்க மாவட்ட துணைச் செய லாளர் த. அன்பழகன், சிபிஎம் ஒன்றி யச் செலயாளர் எல். வடிவேல், நகரச் செலயார் ஏ.ஆர். பாலசுப்பிரமணி யன் ஆகியோர் கோரிக்கைகளை முன்வைத்து உரையாற்றினர்.
