tamilnadu

தமிழகத்தில் 8 ஆண்டுகளில் 12 ஆயிரம் சுயமரியாதைத் திருமணங்கள் பதிவு!

தமிழகத்தில் 8 ஆண்டுகளில் 12 ஆயிரம் சுயமரியாதைத் திருமணங்கள் பதிவு!

தமிழ்நாட்டில் கடந்த 8 ஆண்டு களில் 12 ஆயிரம் சுயமரியாதைத் திரு மணங்கள் நடைபெற்றுள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள் ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் புதன்கிழமை (மார்ச் 26) நடை பெற்ற கேள்வி நேரத்தில் பேசிய  திமுக உறுப்பினர் நா. எழிலன், “திரு மணம் என்பது ஒரு மானுட ஒப்பந்  தம் என்றார் புத்தர். அந்த அடிப்ப டையில், புரோகித மறுப்பு, சாதி மறுப்பு, சடங்குகள் மறுப்பு என்று நாட்டுக்கு அறிமுகப்படுத்தியவர் தந்தை பெரியார். 1928-ஆம் ஆண்  டில் அருப்புக்கோட்டையில் ஒரு சிறிய  கிராமத்தில் சுயமரியாதைத் திரு மணத்தை அறிமுகம் செய்து வைத் தார்.  அதைத் தொடர்ந்து நடைபெற்ற சுயமரியாதைத் திருமணங்களுக்கு, 1968 ஆம் ஆண்டில் சட்ட அங்கீகா ரம் கொடுத்தவர் முதலமைச்சர் அண்ணா. இந்த சட்டத்தின் அடிப்ப டையில் உச்ச நீதிமன்றம் 2023 ஆம்  ஆண்டு, தமிழ்நாட்டில் நிறைவேற்றப்  பட்ட சுயமரியாதைத் திருமணச் சட்  டத்தைப் பாராட்டியது. இந்த வகை யிலான சுயமரியாதைத் திருமணங்க ளுக்கு, பெற்றோர் அனுமதி தேவை யில்லை. பொதுவழியில் திருமணம் நடத்துவதற்கான வழிமுறைகள் தேவையில்லை. உகந்த சான்றுகள் கொடுத்தால் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பல்வேறு சட்ட அங்கீகாரங்கள் கொடுத்த பிற கும், தமிழ்நாட்டில் சில சார்-பதி வாளர்கள் தங்களது சமூக சூழல களை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு இடர்பாடுகளையும், சுய மரியாதை திருமணத்திற்கு தடை யையும் ஏற்படுத்துகிறார்கள். குறிப் பாக, பட்டியலினத்தை சேர்ந்த ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் பல வகையான தடை கள் ஏற்படுத்தப்படுகின்றன. எனவே, இந்த வரலாற்றுப் பின்னணியையும், சமூக பின்னணியையும் கணக்கில் கொண்டு சார்பதிவாளர்களுக்கு போதிய விழிப்புணர்வு அளிப்ப தற்கும், திருமணம் செய்து கொண்ட வர்கள் ஆன் லைன் மூலம் பதிவு  செய்து திருமணச் சான்று பெற்றுக்  கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப் படுமா? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்  சர் பி. மூர்த்தி, “தமிழ்நாட்டில் சுயமரி யாதைத் திருமணம், 1955-ஆம் ஆண்டு இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 7-இன் கீழ் சேர்க்கப்பட்டு தற்  போது வரை அனைத்து சார்பதி வாளர் அலுவலகங்களிலும் நடை முறைப்படுத்தப்பட்டு சுயமரியாதை திருமணம் பதிவு செய்யப்பட்டு வரு கிறது. அதன்படி தமிழ்நாட்டில் கடந்த  8 ஆண்டுகளில் 12 ஆயிரத்து 114 சுய மரியாதை திருமணங்கள் பதிவு செய்  யப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார். மேலும், “சுயமரியாதைத் திரு மணம் பதிவு குறித்து அனைத்து சார்-பதிவாளர்களுக்கு, பதிவுத் துறை பயிற்சி நிலையம் சார்பில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டின் அனைத்து சார்பதிவாளர் அலுவல கங்களிலும் சுயமரியாதை திரு மணங்கள் பதிவு செய்யப்பட்டு வரு கின்றன. திருமணப் பதிவுக்கு தேவை யான அனைத்து நடவடிக்கைகளை யும், பதிவுத் துறையின் இணைய தளத்தில் செய்து கொள்ளும் வகை யில், வசதிகள் செய்யப்பட்டுள்ளது” என்றும் கூறினார்.