tamilnadu

img

10 ஆண்டுகளாக தேங்கிக் கிடக்கும் கோப்புகள் அதிமுக அரசின் மெத்தனத்திற்கு ஓய்வூதியர்கள் மாநாடு கண்டனம்

மதுரை, ஏப்.6-

10 ஆண்டுகளாக தேங்கிக் கிடக்கும் ஓய்வூதியர்களின் கோப்புகளை சரி செய்யாததால் பல ஆயிரக்கணக்கான ஓய்வூதியர்களுக்கு முறையாக பென்சன் கிடைக்காத அவல நிலைக்கு ஆளும் அதிமுகஅரசு தள்ளியுள்ளது என்று தமிழ் நாடு அரசு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. சங்கத்தின் முதல் மாநில மாநாடு வி.ஆர்.கிருஷ்ணய்யர் மகாலில் வெள்ளியன்று நடைபெற்றது.இம்மாநில மாநாட்டிற்கு மாநிலஒருங்கிணைப்பாளர் முனியாண்டி சாமி தலைமை வகித்தார். சங்கத் தின் முன்னாள் தலைவர்கள் தினகரசாமி, ராமமூர்த்தி, துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். வரவேற்புக் குழுத் தலைவர் பரமேஸ்வரன் வரவேற்றார்.அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநில பொருளாளர் ஜெயச்சந்திரன் துவக்க உரையாற்றினார். இணை ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி அறிக்கை சமர்ப்பித்து பேசினார். இணை ஒருங்கிணைப்பாளர் ரவி அமைப்பு விதிகளை முன்மொழிந்து பேசினார்.ஓய்வூதியர் வாழ்வில் மலரட்டும்வசந்தம் எனும் தலைப்பில் முனைவர் சங்கரி கலந்து கொண்டு பேசியகருத்தரங்கம் நடைபெற்றது. சனிக்கிழமை மாநில ஒருங்கிணைப்பாளர் முனியாண்டி சாமி தலைமையில் பொது மாநாடு நடைபெறுகிறது.புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.


21 மாதகால நிலுவைத் தொகையை அனைத்து ஓய்வூதியர்களுக்கும் வழங்க வேண்டும். பதவி உயர்வு பெற்றுஓய்வு பெற்றுள்ள பணியாளர்களுக்கு ஊராட்சி செயலாளர்கள் பணிக்காலத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியத்திற்கு கணக்கிடும் வகையில் நீதிமன்ற ஆணை பெற்றவர்களை போன்று அனைவருக்கும் கிடைக்கும் வகையில் பொதுவான அரசாணையை வழங்கிட வேண்டும்.ஊராட்சி செயலாளர் நிலையில் ஓய்வு பெற்றவர்களுக்கு முறையான கால ஊதியத்தின் அடிப்படையில் ஓய்வு ஊதியம் அனுமதித்து ஆணை வழங்க வேண்டும்.மூத்த குடிமக்கள் அனைவருக்கும் தமிழகம் முழுவதும் சென்று வருவதற்குஇலவச பஸ் பாஸ் வழங்கவேண்டும்.வரி செலுத்துவதிலிருந்து அனைத்து ஓய்வூதியர்களுக் கும் விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 35 தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய முனியாண்டிசாமி, “ஊராட்சி ஒன்றியங்களில் வளர்ச்சித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள அலுவலர்களில் ஒரு பகுதியினர் இன்னும் ஓய்வூதியம் பெறஇயலாத நிலை உள்ளது.


கோப்புகள் முடிக்கப்படாததால் ஓய்வூதியம் பெற இயலவில்லை. விஜிலென்ஸ் மற்றும் தணிக்கையின் மூலமாக வந்த குறைபாடுகளை நீக்கவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக இந்த கோப்புகள் தீர்வு காணப் படாததால் ஓய்வூதியம் பெற முடியாத நிலை உள்ளது. ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றக்கூடிய ஊழியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போன்ற சலுகைகளும், ஓய்வூதியமும் வழங்க வேண்டும். கடந்த 1.1.2016முதல் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மாவட்ட, உயர்நீதிமன்ற நீதிபதிகள், மேல்நிலை அலுவலர்களுக்குநிலுவை தொகை வழங்கப் பட்டுள்ளது. ஆனால் அவர்களுக்கு கீழே பணியாற்றக்கூடிய ஊழியர்களுக்கு 1.10.2017ம் முதல் என்றுநிலுவைத்தொகை வழங்கப்படுகிறது. 21 மாத கால நிலுவைத் தொகையை வழங்க மறுக்கிறது என குற்றம் சாட்டினார். (நநி)