தொழிலாளர்கள் மூன்று பேரை பணியிடை நீக்கம் செய்த நிர்வா கத்தின் அடக்குமுறைக்கு எதிராக சாம்சங் தொழிலாளர்கள் உள்ளி ருப்பு போராட்டம் நடத்தி வருகின்ற னர். இந்தப் போராட்டம் புதனன்று இரவிலும் தொடர்ந்தது. காஞ்சிபுரம் மாவட்டம், சுங்கு வார்சத்திரத்தில் இயங்கிவரும் சாம்சங் தொழிற்சாலை நிர்வாக மானது, பணியில் இருந்தபோது விதி முறைகளை மீறினார்கள், உணவு இடைவேளை முடிந்த பின்பும், பணிக்கு திரும்பவில்லை என பொய்க்குற்றச்சாட்டை சுமத்தி மூன்று தொழிலாளர்களைப் பணி யிடை நீக்கம் செய்து, நோட்டீஸ் கொடுத்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, சென்னை தேனாம்பேட்டையில் சாம்சங் இந்தியா தொழிற்சங்க (சிஐடியு) தலைவர் முத்துக்குமார், ஆலை நிர்வாகத்தினர் மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரி கள் ஆகியோர் நடத்திய முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், புதன்கிழமை யன்று (பிப். 5) உள்ளிருப்புப் போரா ட்டத்தைத் துவங்கியுள்ளனர்.
இதனிடையே, போராட்டம் குறித்து சிஐடியு தலைவர் இ. முத்துக்குமார் கூறியிருப்பதாவது: “நிர்வாகத்திற்கு எதிராக போரா ட்டம் நடத்திய தொழிலாளர்களை குறிவைத்து, சாம்சங் நிர்வாகம் தொடர்ந்து இடையூறுகளை கொடுத்து வருகிறது. தொழிலா ளர்களை அவர்களுக்குத் தொடர் பில்லாத இதர துறைகளுக்கு இட மாற்றம் செய்துள்ளது. தொலைக் காட்சி உற்பத்தி, கம்ப்ரசர் பிரிவு, குளிர்சாதனப் பெட்டி தயா ரிப்பு உள்பட பல்வேறு பிரிவுகள் செயல்படுகின்றன. இதில், தொலைக் காட்சி தயாரிப்புப் பணியில் உள்ளவர்களை அவர்களுக்குப் பழக்கம் இல்லாத போர்க்லிப்ட் பணிக்கு அனுப்பியுள்ளது. இவ்வாறு பலரையும் இடமாற்றம் செய்துள்ளது. இதுபற்றி, தொழி லாளர் நலத்துறையிடம் புகார் தெரிவித்தோம்.
கடந்த மாதம் இரண்டுமுறை தொழிலாளர் நலத்துறை அதிகாரி களுடன் பேச்சுவார்த்தை நடந்தது; அப்போது, ‘போராட்டத்திற்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும் எனக் கூறியும் நிர்வா கம் கேட்கவில்லை’ என்பதைச் சுட்டிக்காட்டினோம். நிர்வாகத்திடம் அதிகாரிகள் பேசியும் பதில் கிடைக்காத நிலை தொடர்ந்ததால், ‘நிர்வாக இயக்குநரை பார்க்க வேண்டும்’ என ஊழியர்கள் கோரிக்கை வைத்தனர்; அவ்வாறு தான், சாம்சங் இந்தியாவின் நிர்வாக இயக்குநரை பார்க்க விரும்புவதாக கூறியதால் செவ்வா ய்க்கிழமை (பிப்.4) இரவு சிஐடியு தொழிற்சங்கத்தைச் சேர்ந்த குண சேகரன் என்ற ஊழியரை நிர்வா கம் இடைநீக்கம் செய்துள்ளது; மறுநாள் (பிப்.5) அதிகாலையில், இரவுப் பணி முடித்துவிட்டுக் கிளம்பிய சிஐடியு துணைச் செயலாளர் மோகன்ராஜ், துணைத் தலைவர் தேவன் ஆகி யோருக்கும் இதேபோல இடைநீக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இடை நீக்கத்திற் கான காரணம் எதுவும் குறிப்பிட வில்லை.
சங்கமே உள்ளே வரக்கூடாது என நிர்வாகம் கூறுகிறது. ஆனால், ‘தொழிலாளர் குழு என்ற பெயரில் இன்னொரு அமைப்பு செயல்படும்’ என்கின்றனர். ‘இப்படி இருந்தால் எப்படி அமைதி வரும்?’ என தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளே கேள்வி எழுப்பிய நிலையில், இதற்கு சாம்சங் நிர்வாகத்திடமிருந்து பதில் வரவில்லை. இவ்வாறு பேச்சுவார்த்தை தோல்வியடைந்த பின்னணியில், ‘சாம்சங் இந்தியா’ நிர்வாகத்தைக் கண்டித்து சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் புதன்கிழமை (பிப். 5) உள்ளி ருப்புப் போராட்டத்தைத் தொடங்கி யுள்ளனர். எங்களைப் பொறுத்தவரை, சிஐடியு சங்கத்தை ஏற்றுக் கொள்ளுமாறு நிர்வாகத்திடம் நாங்கள் கெஞ்சவில்லை. சட்டம் என்ன சொல்கிறதோ அதன்படி செயல்பட்டுக் கொள்கிறோம். ஆனால், ஊழியர்களை ஏன் இடையூறு செய்ய வேண்டும் என்று தான் கேட்கிறோம்.” இவ்வாறு இ. முத்துக்குமார் கூறினார். இந்நிலையில், ‘சாம்சங் இந்தியா’ தொழிலாளர்களின் உள்ளிருப்புப் போராட்டம் புதனன்று இரவும் தொடர்ந்தது.