சென்னை, பிப்.4 - தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளி களிலும் சூழல் மன்றங்கள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத் தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை சார்பில் இரண்டு நாட்கள் நடைபெறும் தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாட்டை செவ்வாய்க்கிழமை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய முதலமைச்சர், “கால நிலை மாற்றம் தான் இன்றைக்கு உலக நாடு களும், மானுட சமுதாயம் எதிர்கொண்டு இருக்கக்கூடிய மிகப்பெரிய சவால்! அதனால்தான், இதை பற்றிய விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறோம். இந்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், அதை எதிர்கொள்வதற்கான பல்வேறு நடவடிக்கை களை தொடர்ந்து எடுத்துக் கொண்டு இருக்கிறோம்.
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில், நம்மை தகவமைத்துக் கொள்ள விவாதங்களை முன்னெடுப்பதற்கான தள மாக இந்த மாநாட்டை நாம் நடத்திக் கொண்டு வருகிறோம். கடந்தாண்டு துபாய், சீனா, பிரேசில், ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடு களில் ஏற்பட்ட வெள்ளம், அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ்-இல் ஏற்பட்ட காட்டுத் தீ, வெப்ப மண்டல நாடுகளில் ஏற்பட்ட வெப்ப அலை பாதிப்புகள் ஆகியவற்றை நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
நம்முடைய சகோதர மாநிலமான கேரளாவில் ஏற்பட்ட வயநாடு நிலச்சரிவை யாரும் மறந்திருக்க முடியாது. தமிழ்நாட்டில் திருவண்ணாமலையில் சிறிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இவையெல்லாம், வெவ்வேறு நாடுகளில் - மாநிலங்களில் நடந்த சம்பவங்களாக இருந்தாலும், இது எல்லாவற்றிற்கும் ஒரே காரணமாக கால நிலை மாற்றத்தைத்தான் சொல்ல முடியும். இதை நாம் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்.
காலநிலை மாற்றத்தை கல்வித் துறை மூலமாக புகட்ட நம்முடைய அரசு திட்ட மிட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் எதிர்காலத்திற் கான கனவுகள் எல்லாவற்றிற்கும் கல்வி தான் அடித்தளமாக இருக்கிறது! அதனால், நம் முடைய அரசு, காலநிலைக் கல்வியறிவை ஒரு இயக்கமாகவே முன்னெடுக்க முடிவு செய்திருக்கிறது.
அதன்படி, தமிழ்நாட்டின் அனைத்துப் பள்ளிகளிலும் ‘சூழல் மன்றங்கள்’ ஏற்படுத்தப் படும். கால நிலைக் கல்வி அறிவுக்கு என்று ஒரு கொள்கையை தமிழ்நாடு அரசு விரைவில் வகுத்து அறிவிக்க உள்ளது” என்றார்