“பழங்குடி அமைச்சராக வேண்டும் என்பது எனது கனவு. உயர் குலத்தில் உள்ள ஒருவர் பழங் குடி அமைச்சராக வேண்டும். அப்போது தான் அவர்களின் வாழ் வில் முன்னேற்றம்ஏற் படும். இதுபோன்ற ஜனநாயக மாற்றங் கள் நிகழ வேண்டும்” என்று ஒன்றிய இணை அமைச்சர் சுரேஷ் கோபி கூறினார்.
தில்லியில் நடந்த தேர்தல் பிரச்சா ரக் கூட்டத்தில் பேசும் போது இந்த சர்ச் சைக்குரிய கருத்தை அவர் தெரிவித்துள் ளார். கேரளத்தை முற்றிலுமாக புறக்க ணித்த ஒன்றிய பட்ஜெட்டை ஆதரித்து சுரேஷ் கோபியும் குரல் கொடுத்தார். ‘பட்ஜெட் முற்றிலும் திருப்திகரமாக உள்ளது.’ ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், அவை பட்ஜெட்டில் பெரும் பாலும் சரி செய்யப்பட்டன. கேரளம் பணம் தரவில்லை என்று கூறி கூக்குர லிடக்கூடாது. ஒன்றிய பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் தொகை முறையாக செலவிடப்பட வேண்டும். பட்ஜெட் என்பது அடித்தட்டு மக்களை மட்டும் கருத்தில் கொள்ளக்கூடாது, அது அனை வரின் உரிமை. நடுத்தர வர்க்கத்தி னர் ஒருபோதும் கருத்தில் கொள்ளப்படு வதில்லை. நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் மக்களுக்கானது. “ஜான் பிரிட்டாஸ் மாநிலங்களவையில் தவறாக பேசுகிறார்” என்றும் சுரேஷ் கோபி கூறினார்.
கேரளாவை பின்தங்கிய மாநில மாக ஒப்புக்கொண்டால் கூடுதல் உதவி கள் வழங்க முடியும் என்று மற்றொரு ஒன்றிய அமைச்சர் ஜார்ஜ் குரியன் கூறியிருந்தார். கேரளம் பின்தங்கிய மாநிலம் அல்ல என்பதால் பட்ஜெட் டில் குறிப்பிடத்தக்க எதுவும் அறி விக்கப்படவில்லை என்றும், கேரளம் பின்தங்கிய மாநிலம் என்பதை ஒப்புக் கொண்டால், அவர்களுக்கு கூடுதல் உதவி கிடைக்கும் என்றும் அவர் கூறி னர். கல்வி, சமூக மற்றும் அடிப்படை விசயங்களில் கேரளம் மற்ற மாநிலங்க ளை விட பின்தங்கியிருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். பின்னர் ஆணையம் அதை ஆராய்ந்து ஒன்றிய அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் என்றும் குரியன் கூறினார்.