லக்னோ:
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர்கோயில் கட்டலாம், முன்னதாக கோயில் கட்டுவதற்கு புதிய அறக்கட்டளையை 3, 4 மாதத்தில் மத்திய அரசுஉருவாக்க வேண்டும்; அந்த அறக்கட்டளையிடம் 2.77 ஏக்கர் நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என கடந்த நவம்பரில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதனடிப்படையில், ராம ஜென்மபூமி நியாஸ் அறக்கட்டளைத் தலைவராக மஹந்த் நிரிதியா கோபால் தாஸை மத்திய அரசு அண்மையில் நியமித்தது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படியே ராமஜென்ம பூமி நியாஸ் தலைவராக மஹந்த்நிரிதியா கோபால் தாஸ் செயல்படுவார் என்றும் அவரது மேற்பார்வையின் கீழ்ராமர் கோயில் கட்டும் பணிகள் நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்தது.இந்நிலையில் மஹந்த் நிரிதியா கோபால் தாஸூக்கு, நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு‘இசட்’ பிரிவு பாதுகாப்பும் அறிவித்துள்ளது.மஹந்த் நிரிதியா கோபால் தாஸை, கடந்த 2001-ம் ஆண்டு அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியதாக கூறி, அவருக்கு வாஜ்பாய் தலைமையிலான மத் திய பாஜக அரசு ஏற்கெனவே ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கியிருந்தது. அதுதற்போது ‘இசட்’ பிரிவாக உயர்த்தப் பட்டுள்ளது.காங்கிரஸ்தலைவர் சோனியா காந்தி,சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோருக்கான பாதுகாப்பு வசதிகளையெல்லாம் மோடி அரசு அண்மையில் குறைந்தது. மாறாக, ராமர் கோயில் சாமியாருக்கு பாதுகாப்பை அதிகரித்துள்ளது.