குவாலியர், மே 2-மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில்கைது செய்யப்பட்டு 11 ஆண்டுகள் சிறையில் இருந்தவர் பிரக்யா சிங் தாக்குர்.பெண் சாமியாரிணியான இவரைத்தான், போபால் தொகுதி வேட்பாளராக பாஜக நிறுத்தியுள்ளது.இந்நிலையில், வேட்பாளரானது முதல் தொடர்ந்து சர்ச்சையாகவே பிரக்யா சிங் பேசி வருகிறார். காவல்துறை அதிகாரி ஹேமந்த் கார்கரே சாவுக்கு, தனது சாபம்தான் காரணம் என்றும், பாபர் மசூதியை இடித்ததற்காக பெருமைப்படுகிறேன் என்றும் பிரக்யா சிங் தாக்குர் பேசியதற்கு பல முனைகளிலிருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தன. எனினும் அவர் தனது பேச்சைகுறைப்பதாக இல்லை. தற்போது தேர்தல் ஆணையமே அவருக்கு 3 நாள் தடை விதித்து, நடவடிக்கைஎடுத்துள்ளது.இதனிடையே, பிரக்யா சிங்-கின் மதவெறிப் பேச்சுக்கு, ஆர்எஸ்எஸ் விதைத்த நச்சு விதைதான் காரணம்என்று பிரக்யா சிறுவயதுக் காலத்தைக்கழித்த லஹார் நகரைச் சேர்ந்தவரும், மத்தியப்பிரதேச காங்கிரஸ் அமைச்சருமான கோவிந்த் சிங் கூறியுள்ளார். “பிரக்யா சிங் சிறுவயதில் அமைதியானவராகத்தான் இருந்தார். ஆர்எஸ்எஸ் மற்றும் ஏபிவிபி தொடர்பு ஏற்பட்ட பிறகுதான், அவரின் வாழ்க்கை திசைமாறியது. அந்த இளம்பெண்ணின் மனத்தில் மதவாத நஞ்சை விதைத்து,முஸ்லிம்கள் மீதான வெறுப்பை வளர்த்து, ஒட்டுமொத்தமாக அவரது வாழ்க்கையை திசைத்திருப்பிநாசம் செய்து விட்டார்கள். எனவே, பிரக்யா சிங்தாக்கூரின் செயல்பாடுகளுக்கு முழு பொறுப்பேற்க வேண்டியது ஆர்எஸ்எஸ் பரிவாரங்கள்தான். பாஜகவின் பங்கும் இதில் முக்கியத்துவம் வாய்ந்தது” என்று கோவிந்த் சிங் கூறியுள்ளார்.