போபால்:
மத்தியப்பிரதேச காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுமாறு, மாநில ஆளுநருக்கு, பாஜக தலைவர் கோபால் பார்கவா கடிதம் எழுதியிருந்தார்.
மக்களவைத் தேர்தலின் முடிவில், மத்தியில் பாஜக கூட்டணியே மீண்டும் ஆட்சியமைக்கும் என்று கருத்துக்கணிப்புகள் ஏற்படுத்திய தைரியத்தின் அடிப்படையில், கோபால் பார்கவா இந்த கடிதத்தை எழுதியிருந்தார்.
இந்நிலையில், “மத்தியப்பிரதேச காங்கிரஸ் அரசுக்கு எதிராகச் சட்டப்பேரவையில் எப்போது நம்பிக்கையில் லாத் தீர்மானம் கொண்டு வந்தாலும் அதைச் சந்திக்கத் தயார்” என்று முதல்வர் கமல் நாத் பதில் அளித்துள்ளார். “கடந்த 5 மாதங்களில் மட்டும் 4 முறை பெரும்பான்மையை நிரூபித்திருக்கிறோம். இப் போதும் நிரூபித்து அதில் வெற்றி பெறுவோம்” என்று கமல்நாத் தெரிவித்துள்ளார்.
மத்தியப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 எம்எல்ஏ-க்களில் காங்கிரஸ் கட்சிக்கு114 எம்எல்ஏ-க்கள் உள்ளனர்.சமாஜ்வாதியின் 1 எம்எல்ஏ,பகுஜன் சமாஜ் கட்சியின்2 எம்எல்ஏ-க்களும், சுயேச்சைகள் 4 பேரும் காங்கிரஸை ஆதரிக்கின்றனர். பாஜகவுக்கு 109 எம்எல்ஏ-க்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.