tamilnadu

img

ம.பி. மாநிலத்திலும் தலித் பெண்ணுக்கு வல்லுறவுக் கொடுமை... பாஜக ஊடக நிர்வாகி கைது

போபால்:
மத்தியப்பிரதேச மாநிலத்தில், தலித் பெண்ணை பாலியல் வல்லுறவுக் கொடுமைக்கு உள்ளாக் கிய, பாஜக ஊடகப் பொறுப்பாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.மத்தியப்பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் இருந்து 269 கி.மீ. தொலைவில் உள்ள அசோக் நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தம்ராகர். பாஜகவின் கட்சியின் ஊடகப் பொறுப்பாளரான இவர், தலித் பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் சுரங்கத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி,சிங்க்ராலி மாவட்டத்திற்கு காரில் அழைத்துச் சென்றுள் ளார். வழியில் தலித் தொழிலாளிக்கு மதுபானம் வாங்கிக் கொடுத்து, அவரை நன்றாக குடிக்க வைத்துள்ளார். அவர்போதையில் நிதானத்தை இழந்து விட்ட நிலையில், அவரது மனைவியை மட்டும் வேறொரு இடத்திற்கு வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று பாலியல் வல்லுறவுக் கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார். இதனை வெளியில் யாரிடமும் சொன்னாலோ, போலீசில் புகார் செய்தாலோ, கொன்று விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.எனினும் பாதிக்கப்பட்ட தலித் பெண், தனக்கு நேர்ந்த கொடுமையை துணிச்சலாக காவல்துறையில் புகாராக அளிக்கவே, பாஜக ஊடகப் பொறுப்பாளர் தம்ராகரை போலீசார் சில நாட்களுக்கு முன்பு கைது செய் துள்ளனர்.