லக்னோ:
வயிற்றுப்பிழைப்பிற் காக ஆஞ்சநேயர் போல் வேடமணிந்து பிச்சை வாங் கிய முஸ்லிம் இளைஞர் மீது,இந்துத்துவா கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.உத்தரப்பிரதேச மாநிலத்தின் மேற்குப் பகுதியில் உள்ளது, பரேலி மாவட்டம். அங்கு பிரபல ஆஞ்சநேயர் கோயில் ஒன்று உள்ளது. அந்தக் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் முகமது நசீம் என்ற 19 வயது இளைஞர் வயிற்றுப் பிழைப்புக்காக அனுமார் போல் நீண்ட வாலுடன் வேடம் அணிந்து பிச்சை வாங்கியுள்ளார்.அப்போது அங்கு வந்த‘பஜ்ரங் தள்’ குண்டர்கள், ஒருமுஸ்லிம் ஆஞ்சநேயர் வேடமணிந்து பிச்சை எடுப்பதா? என்று கூறி, கடுமையாகத் தாக்கியுள்ளனர். பின்னர், அந்த இளைஞரை அருகில் உள்ள சுபாஷ்நகர் காவல் நிலையத்திற்கு இழுத்துச் சென்றுள்ளனர்.போலீசார் விசாரித்ததில் இளைஞர் நசீம், ஒரு நாடோடி என்றும், பிழைப்பிற்காக இதுபோல பல வேடமணிந்து பொதுமக்களிடம் அவர் பிச்சை வாங்கி வந்ததும் தெரியவந்தது. அதிலும், ஆஞ்சநேயராக ஒருமுறைதான் வேடம் போட்டிருக்கிறார்; அன்றே அவரை பஜ்ரங்தள்கூட்டம் பிடித்து தாக்கிவிட்டது என்பதும் தெரியவந்துள்ளது.நசீமின் பரிதாப நிலையைஅறிந்த போலீசார், புகாரைத்திரும்பப் பெற்றுக்கொள்ளும்படி ‘பஜ்ரங் தள்’ கூட்டத்திடம் கெஞ்சியுள்ளனர். ஆனால், அவர்கள் ஈவிரக்கமற்ற வகையில் மறுத்து விட்டனர்.இதனால், வேறு வழியில்லாத சுபாஷ்நகர் போலீசார், கோயிலுக்கு வரும் இந்து மதத்தினரை ஏமாற்றி- அவர்கள் நம்பிக்கைக்கு ஊறு விளைவித்து நசீம் ஆள்மாறாட்ட மோசடி செய்ததாக வழக்குப் பதிவு செய்து,பரேலி சிறையில் அடைத்துள்ளனர்.