tamilnadu

img

பெயரைக்கூட மாற்ற வேண்டிய நெருக்கடியில் முஸ்லிம்கள்...

போபால்:
நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாதுகாப்பின்மையால், முஸ்லிம் அடையாளத்தில் இருக்கும் தனது பெயரைக் கூடமாற்றிவிடலாம் என்று கருதுவதாக மத்தியப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அரசு அதிகாரி ஒருவர், கவலையுடன் குறிப்பிட்டுள்ளார்.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதலே, நாட்டின் பல பகுதிகளில் கும்பல் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து விட்டன.அதிலும் வடமாநிலங்களில் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் வலம் வரும் குண்டர்கள், சிறுபான்மை மக்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தி படுகொலைகளையும் அரங்கேற்றி வருகின்றனர்.ராஜஸ்தானில், கடந்த 2017-ஆம் ஆண்டு பசு மாடுகளை கடத்திச் சென்றதாக பொய்கூறி, பெஹ்லுகான் என்ற இஸ்லாமியரைஅடித்துக் கொன்றனர். அத்துடன் கொல்லப் பட்டவர் மீதே வழக்கு தொடரப்பட்டு, அண்மையில் குற்றப்பத்திரிகையும் தாக்கல்செய்யப்பட்டது.

இந்நிலையில்தான், மத்திய பிரதேசத்தை சேர்ந்த நியாஸ் கான் இஸ்லாமிய அதிகாரி ஒருவர் தனது பெயரை மாற்றிக் கொள்ள விரும்புவதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ஒரு நாவலாசிரியருமான இவர்,நாட்டிலுள்ள முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு குறித்து தனது அச்சத்தை வெளிப் படுத்தியுள்ளார். “நான் ஒருவேளை எனது பெயரை மாற்றிக்கொண்டு புதிய பெயரை வைத்து கொண்டால் வன்முறை கும்பல்களிடமிருந்து அது என்னை காப்பாற்றும் என நினைக்கிறேன். என்னிடம் குர்தா, தொப்பி மற்றும் தாடி போன்ற என் சமூக அடையாளங்கள் இல்லை.எனவே வன்முறை கும்பல் என்னை சூழ்ந்தால் பொய்யான பெயரை சொல்வதன் மூலம்,என்னால் எளிதாக அந்த கும்பல்களிடமிருந்து தப்பிக்க இயலும் என நினைக்கிறேன். இருப்பினும், என் சகோதரர் எங்களது பாரம்பரிய உடைகளை அணிந்து தாடி வைத்துள்ளதால் அவர் எப்போதும் ஆபத்தான சூழலிலேயே இருக்கிறார்களே.. என்ன செய் வேன்..?” என்று பதிவிட்டுள்ளார்.