மதுரை:
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் உதித்சூர்யாவின் தந்தை மருத்துவர் வெங்கடேசன் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.சென்னையை சேர்ந்த வெங்கடேசன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். நீட்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து சட்ட விரோதமாக மாணவர் தேனிஅரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததாகக் கூறி தேனி கண்டமனூர் விலக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் உதித்சூர்யா, அவரது தந்தை மருத்துவர் வெங்கடேசனை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர். இதில் உதித்சூர்யா விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கில்மருத்துவர் வெங்கடேச னுக்கு ஜாமீன் வழங்கக் கோரி கடந்த அக்டோபர் 17-ஆம் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் வெங்கடேசனின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே வெங்கடேசனுக்கு மேல் சிகிச்சைஅளிக்க வேண்டியிருப்ப தால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கோரி அவர் சார்பில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல்செய்யப்பட்டது.இந்த மனு திங்களன்று நீதிபதி ஜி. ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், நீட் தேர்வில் மாணவர் ஆள் மாறாட்டம் செய்தது தொடர்பான விசாரணை இன்னும் முடிவடையவில்லை. மேலும் வழக்கில் முக்கியக் குற்றவாளிகளை கைது செய்து விசாரணை செய்ய வேண்டும். இந்த நிலையில் வெங்கடேசனுக்கு ஜாமீன் வழங்கினால் வழக்கு விசாரணையில் தடை ஏற்பட வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மருத்துவர் வெங்கடேசனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.