tamilnadu

கொரோனா உயிரிழப்பு தயார் நிலையில் சவக்குழிகள்

போபால், மே 16- கொரோனா-வால் உயிரிழப்பவர் களை தாமதமின்றி புதைக்க முன்ன தாகவே ஏராளமான சவக்குழிகள் தோண்டி “ரிசர்வ்” செய்யப்பட்டுள்ளன. மத்தியப்பிரதேசத்தில் ஜஹாங்கி ராபாத் பகுதி ஹாட்ஸ்பாட் பகுதியாக அறிவிக்கப்பட்டு முற்றிலும் சீல் வைக் கப்பட்டுள்ளது. இங்கு வசிக்கும் சுமார் 1,500 பேர் வேறிடங்களுக்கு மாற்றப் பட்டுள்ளனர். இதுவரை ஆயிரக்கணக் கான மாதிரிகள் இப்பகுதியிலிருந்து சேக ரிக்கப்பட்டுள்ளன. போபால் பகுதியில் இதுவரை 35 பேர் இறந்துள்ளனர். அவர் களில் பெரும்பாலோனோர் ஜஹாங்கி ராபாத் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். மத்தியப் பிரதேசத் தலைநகர் போபா லின் ஜஹாங்கிராபாத் பகுதியில் உள்ள ஒரு மயானத்தில் வரவிருக்கும் நாட்களில் பல உடல்கள் வந்தால் அதைச் சமாளிக்க முன்கூட்டியே ஒன்றல்ல சுமார் 12 குழி கள் தோண்டிவைக்கப்பட்டுள்ளன.  ஜஹாங்கிராபாத்தில் உள்ள ஜாத வல்லா மயான நிர்வாகம் கூறுகையில்,  வரும் நாட்களில் பல உடல்கள் வந்தால் சமாளிப்பதற்காக 12 சவக்குழிகள் தயார் செய்யப்பட்டுள்ளன எனக் கூறியுள்ளனர். மயான நிர்வாகி மொஹட் ரெஹா னின் கூறுகையில், “இந்தக் கல்லறை  ஹமீ டியா மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையான சிராயு ஆகியவற்றி லிருந்து உடல்களைப் பெறுகிறது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று கார ணமாக இறப்புகள் நிகழ்ந்தனவா என்பது பற்றி எதுவும் தெரியாது இல்லை. ஆனால், உடல்களை அடக்கம் செய்வது விரைவாக நடக்க வேண்டுமென்றார்.