மத்தியப்பிரதேசத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்த இளம் பெண் அவரது கணவரை தூக்கிக் கொண்டு நீண்ட தூரம் நடக்க வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் ஜபுவா மாவட்டத்தில் தேவிகார் பகுதியில் 20 வயது கொண்ட இளம்பெண் ஒருவர் வேறொரு சாதியை சேர்ந்த நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தகவலறிந்த பெண்ணின் சமூகத்தினர் வினோத தண்டனையை வழங்கி உள்ளனர். தனது கணவரை தோளில் சுமந்தபடி தூக்கி கொண்டு நீண்ட தொலைவுக்கு அந்த பெண்ணை நடந்து செல்லும்படி அவரது சமூகத்தினர் வற்புறுத்தி உள்ளனர். அந்த பெண்ணை ஆண்கள் சூழ்ந்து கொண்டு தொடர்ந்து நடப்பதற்கு கட்டாயப்படுத்துகின்றனர். அந்த பெண் சிறிது நேரம் நிற்கும்பொழுது சுற்றி இருப்பவர்கள் கேலி செய்ததுடன், பெண்ணை நடக்கும்படி கூறி கூச்சலிட்டு உள்ளனர். இதனால் உதவியற்ற நிலையில் அந்த பெண் தொடர்ந்து நடந்து சென்றுள்ளார்.
இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளிவந்து வைரலாகி உள்ளது. இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் தொடர்புடைய 2 பேரை கைது செய்த காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.