tamilnadu

img

ஓட்டுநர்கள் லுங்கி கட்டினால் ரூ.2 ஆயிரம் அபராதம்..!

லக்னோ:
வாகன ஓட்டுநர் லுங்கி அணிந்திருந்தகாரணத்திற்காக, அவரிடம் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலித்து, உத்தரப்பிரதேச போலீசார் அதிர்ச்சி அளித் துள்ளனர்.லக்னோவில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசார் அந்த பகுதியில் வந்த லாரியை மடக்கி சோதனையிட்டு உள்ளனர். வாகன ஓட்டுநரிடம் அனைத்து ஆவணங்களும் சரியாகவே இருந்துள்ளன. அவரும் அவற்றைக் காட்டியுள்ளார். எனினும் அவர் லுங்கி அணிந்திருந்ததைப் பார்த்துவிட்ட போலீசார், அதற்காக, 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.கேட்டதற்கு, “ஓட்டுநர் முழுக்கால் உடையில் இருக்க வேண்டும் என்று, 1989-ஆம் ஆண்டு சட்டத்திலேயே உள்ளதாகவும், அப்போது அபராதம் ரூ. 500 ஆக இருந்தது; தற்போது மோடிஅதனை ரூ. 2 ஆயிரமாக உயர்த்தி இருக்கிறார்; மற்றபடி புதிய சட்டத்திற்கும் லுங்கிக்கும் எந்த தொடர்புமில்லை” என்று போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.லாரி, டிராக்டர் போன்ற சரக்கு வாகன ஓட்டுநர்கள் லுங்கி, வேஷ்டி அணிவதற்கு அனுமதி கிடையாது என்றாலும், நீண்டதூரம் பயணிக்கும் சரக்கு வாகன ஓட்டுநர்களுக்கு, லுங்கியும், அரைக்கால் சட்டையும் சவுகரியமாக இருந்தது. மோடி அரசின் ‘புண்ணியத்தில்’ லுங்கிக்கும் ஆபத்து வந்து விட்டது.