லண்டன்:
உலகில் பல நாடுகள் காந்தியின் போதனைகளை கற்று வருகிறார்கள். இந்நிலையில் இந்தியதேசத்தந்தை மகாத்மா காந்தியைநினைவு கூரும் வகையில் நாணயம் ஒன்றை வெளியிட இங்கிலாந்து அரசு பரிசீலித்து வருவதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து இங்கிலாந்தின் நிதி அமைச்சர் ரிஷிசுனிக் கூறுகையில், இந்திய சுதந்திரத்திற்காக போராடியமகாத்மா காந்தியை நினைவு கூரும் வகையில் நாணயம் ஒன்றை வெளியிட ராயல் மின்ட் அட்வைஸரி கமிட்டிஆலோசித்து வருகிறது. மேலும் காந்தி கருப்பின மற்றும்ஆசிய, பிற சிறுபான்மை இன மக்களை அங்கீகரிப்பதற்காக அரும்பாடுபட்டார் என்பதை ஆலோசனை குழுவிடம் தெரிவித்துள்ளதாக கூறினார். ராயல் மின்ட் அட்வைஸரி கமிட்டி வெளியிட்டுள்ள மின்னஞ்சலில் காந்தி
யை நினைவு கூரும் வகையில் நாணயத்தை வெளியிட (ஆர்எம்ஏசி) முடிவு தற்போது பரிசீலித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.