tamilnadu

img

உலகம் முழுவதும் 23 லட்சத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பு...  

லண்டன் 
210-க்கும் நாடுகளை மிரட்டி வரும் கொரோனா என்னும் கொடிய வைரஸ் தற்போது அமெரிக்காவில் மையம் கொண்டுள்ளது. குறிப்பாக ஐரோப்பா கண்டத்தில் உள்ள 5 நாடுகளில் கொரோனா மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை என இரண்டிலும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 

இந்நிலையில் மாலை 5 மணி நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 லட்சத்து 47 ஆயிரத்து 887 ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 61 ஆயிரத்து 138 ஆக உள்ள நிலையில், ஆறுதல் செய்தியாக 6 லட்சத்து 5 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பிலிருந்து போராடி மீண்டுள்ளனர். 

அனைத்து நாடுகளும் தங்கள் நாடுகளிலிருந்து கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையைக் கூறுவது வழக்கமாக கடைப்பிடித்து வரும் நிலையில், பிரிட்டனில் அங்கம் வகிக்கும் இங்கிலாந்து, வடக்கு அயர்லாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் ஆகிய நாடுகள் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையைச் சரி வரக் கூறுவதில்லை.