ரியோ
தென் அமெரிக்க கண்டத்தின் மிகப்பெரிய நாடான பிரேசிலில் கொரோனா வைரஸ் கணிக்க முடியாத அளவிற்கு மிக வேகமாக பரவி வருகிறது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக அந்நாட்டு அரசு கூறினாலும் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வந்தபாடில்லை.
இந்நிலையில் பிரேசிலில் கொரோனா பாதிப்பு 7 லட்சத்தை நெருங்குகிறது. தற்போதைய நிலையில் 6 லட்சத்து 91 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 18 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் 542 பேர் பலியாகியுள்ள நிலையில், உயிரிழந்தோர்களின் உயிரிழந்தோர்களின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
3 லட்சத்து 2 ஆயிரம் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் குறுகிய காலத்தில் பலத்த சேதாரத்தை சந்தித்துள்ள பிரேசிலில் மார்ச் 3-ஆம் வாரத்தில் பரவல் வேகம் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.