ரோம்
சீனாவுக்கு வெளியில் கொரோனா வைரஸால் அதிகளவு பாதிப்பைச் சந்தித்துள்ள ஐரோப்பா நாடான இத்தாலியில் இயல்பு நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டில் ஜெட் வேகத்தில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் மக்கள் பொதுவெளியில் வரவே அச்சம் கொள்கின்றனர். இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 3 ஆயிரத்து 89 பேருக்கு வைரஸ் பரவியுள்ளதாகவும், அவர்களில் பலர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் அந்நாட்டுச் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கொரோனாவின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருவதால் இத்தாலியில் உள்ள அனைத்து பள்ளிகளை வரும் 15-ஆம் தேதி வரை மூட அந்நாட்டுக் கல்வித்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.