சிங்கப்பூர் ஒபன் இறகுப்பந்து போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் மற்றும் பி.வி.சிந்து ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
சிங்கப்பூர் ஓபன் இறகுபந்து போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் இந்தோனேசிய வீராங்கனை யுலியா யோசேபின் சுசண்டோவை 21-16 மற்றும் 21-11 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி கொண்டு இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். மேலும், இதற்கு முன்பு நடந்த போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இந்தோனேசிய வீராங்கனை யன்னி அலேசாந்தரா மைனாகி என்பவரை 21-9 மற்றும் 21-7 என்று எளிதாக வெற்றி கொண்டார். இதனால் சாய்னா நேவால் மற்றும் பி.வி.சிந்து ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
மேலும், இரண்டாவது சுற்றில் பி.வி.சிந்து டென்மார்க் வீராங்கனை மியா பிலிஜ்ஃபெல்ட்டை சந்திக்கவுள்ளார்.