இருசக்கர வாகனத்தில் செல்லும் போது ஹெல்மெட்க்குள் வைத்துப் பேசிய செல்போன் வெடித்ததால் இளைஞர் படுகாயம் அடைந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த குலகிரி அருகே புளியரிசி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது போன் வந்துள்ளது இதனையடுத்து செல்போனை ஹெல்மெட்டுக்குள் வைத்துக் கொண்டு பேசியவாறு அவர் சென்றுள்ளார் அப்போது திடீரென செல்போன் வெடித்து தலை,காது,கை பகுதியில் படுகாயங்களுடன் அவர் கீழே விழுந்துள்ளார்.
போலீஸ் மேற்கொண்ட விசாரணையில் அவர் விவோ ஸ்மார்ட்போனை ஹெல்மெட்டுக்குள் வைத்து பேசிக்கொண்டு சென்றார் என்பது தெரியவந்தது.