tamilnadu

கிருஷ்ணகிரியில்  மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று

கிருஷ்ணகிரி, மே 7- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு வியா ழனன்று (மே 7) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று இல்லாத ஒரே பச்சை  மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 4ஆம் தேதி 2 மூதாட்டிகளுக்கு கொரோனா தொற்று கண்ட றியப்பட்டது.  சூளகிரி பகுதியை சேர்ந்த இவர்களோடு தொடர்பில் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்  கொள்ளப்பட்டது. அதில் மூதாட்டி ஒருவரின் உறவினர்கள் 4 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.