தமிழகத்தின் நெல் சாகுபடியில் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப் பட்டிணம் முக்கிய பங்கு வகிக்கிறது. தென்பெண்ணை ஆற்றில் கட்டப்பட்ட கேஆர்பி அணை மற்றும் கிருஷ்ணகிரி, அவதானப்பட்டி காவேரிப் பட்டிணம் ஆகிய ஏரிகள் மூலம் சுமார் 12 ஆயிரம் ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெற்று வந்தது. கடந்த 15 ஆண்டுகளாக படிப்படியாக பருவ மழை பொய்த்துப் போனதாலும், ஏரி குளங்கள் முறையாக பரா மரிக்கப்படாததாலும் மழை நீர், மற்றும் தென்பென்னை ஆற்று நீரை தேக்கி வைக்க முடியவில்லை. அணையில் வண்டல் மண் எடுப்ப தற்காக பருவம் பார்க்காமல் நீரை வெளி யேற்றியதால் அணை வறண்டு போயுள்ளது. இதனால் சிறு,குறு விவசாயிகள் கடு மையாக பாதிக்கப்பட்டு, மாற்றுப்பயிர் சாகுபடி செய்கின்றனர். சிறு, குறு விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாததால் நிலங்களை விற் பனை செய்து வருகின்றனர். அந்த நிலங் கள் வீட்டுமனைகளாக மாறி வரு கின்றன. இதனால் விவசாயத்தை விட்டே வெளியேறி வருகின்றனர் என அப்பகுதி யில் விவசாயம் செய்து வரும் பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் கே. சி.ராமசாமி கூறுகிறார்.
விவசாயி பெரியசாமி கூறுகையில், “விதைநெல் வாங்கினால் கூட மானிய தொகை கிடைக்க ஒரு வருடம் ஆகிறது. மானியத்தில் வழங்கப்படும் மருந்துக ளால் எந்த பயனும் இல்லை. மிகுந்த நெருக்கடிகளுக்கிடையில் கடன் வாங்கி விவசாயம் செய்தாலும், அரசு கட்டுபடி யான விலை நிர்ணயம் செய்வதில்லை. முதலாளிகளுக்கு அள்ளிக் கொடுக்கும் மத்திய அரசு,விவசாயத்திற்கு கிள்ளிக் கொடுப்பது கூட இல்லை. மாநில அரசும் நெல் விவசாயத்திற்கு ஊக்கம் கொடுக்காத கல்நெஞ்சம் கொண்டதாக மாறி வருகிறது என்றார். நெல் சாகுபடியில் பெரும் நட்டம் ஏற்படு வதால், தற்போது விவசாயிகள் அணை யில் இருந்து வண்டல் மண்ணை எடுத்து வந்து விளை நிலத்தில் கொட்டி, நிலத்தை மேடாக்கி நெல்லுக்கு பதில் குறைந்த செலவில், குறைந்த பராமரிப்பில், நீண்ட கால வருமானமும், லாபமும் தரும் மல்லிகை செடி, தென்னை மரம் போன்ற மாற்றுப் பயிர்களுக்கு மாறி வருகின்ற னர்.
இதனால் வருங்காலத்தில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் அவர் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.ஜெய ராமன் கூறுகையில், “நெல் விளைந்த 12 ஆயிரம் ஹெக்டேர் வயல் பரப்பு தற்போது பாதியாக குறைந்துள்ளது.பலர் மாற்றுப்பயிறுக்கு மாறுவதுடன் நெல் விளைந்த பூமியை கல் மரங்கள்களின் காடாகவும் நில விற்பனையாளர்ககள் சூரையாடிடவும் வழி ஏற்பட்டுள்ளது” என்றார். கொரோனா பொதுமுடக்க காலத்தில் கூட நெல் சாகுபடி செய்யும் விவசாயி களுக்கு மத்திய மாநில அரசுகள் நிவாரண மும், ஆதரவும் தர மறுக்கிறது. விவசாய மும், விவசாயிகள் வாழ்வாதாரமும் சீர ழிந்தற்கு காரணம் மத்திய-மாநில அரசு களின் தவறான பொருளாதரக் கொள்கையே என்றும் விவசாயத்தையும், விவசாயிகளையும், நீர் வளங்களயும் பாதுகாக்க அரசு முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
-ஒய். சந்திரன் ஓசூர்