tamilnadu

img

72 அரங்குகள், 1 கோடி புத்தகங்கள் சாதனை படைத்த ஓசூர் புத்தகத் திருவிழா

கிருஷ்ணகிரி, ஜூலை 24- தமிழ்நாடு அறிவியல் இயக்கமும், ஓசூர் குடியிருப்போர் நல சங்கமும் இணைந்து பிஎம்சி டெக் கல்லூரி உதவி யுடன் நடைபெற்று வந்த ஓசூர் 8 வது புத்தகத் திருவிழாவின் நிறைவு விழா ஜூலை 23 அன்று நடைபெற்றது. கிராமியக் கலைஞர் வையம் பட்டி முத்துச்சாமி அரங்க மேடையில் நடை பெற்ற விழாவுக்கு செயலாளர் பால கிருஷ்ணன் தலைமை தாங்கினார். தலைவர் துரை வரவேற்றார். செயல் வீரர்ககள், சிறப்பு விருந்தினர்கள், நிர்வாகிகள், விழாவுக்கு உதவிய ஒத்துழைத்த அனைவரையும் ஒருங்கி ணைப்பாளர் சிவக்குமார் அறிமுகம் செய்தார். விழாவுக்கு பங்காற்றிய அனைவரும் கௌரவிக்கப்பட்டனர். பொருளாளர் பக்தவச்சலம், கல்லூரி செயலாளர் குமார், துணைத்  தலைவர்கள் முனைவர் சேதுராமன், ஸ்ரீநிவாசலு, கண்மணி, நீலகண்டன் மதனகோபால், இணைச் செயலா ளர்கள் பாலகிருஷ் ணன், உமாராணி, பாரதிராஜா, அரிச்சந்திரன் பவாணி, விக்னேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். “படிக்க நேரமில்லையா’ எனும் தலைப்பில் எழுத்தாளரும், பாதிப்பாளருமான லேனா தமிழ் வாணன் உரையாற்றினார். துணைத் தலைவர் சத்தியமூர்த்தி நன்றி கூறி னார். 9 வது புத்தகத் திருவிழா அடுத்த ஆண்டு ஜூலை 10 முதல் 21 வரை 12  நாட்கள் நடைபெரும் என அறிவிக்கப் பட்டது. மாணவர்களுக்கு இலவசமாக புத்தகங்கள் வழங்குவதற்கான நிதி  சிறுகச் சிறுக திரட்டிட 9 மண் உண்டி யல்கள் மேடையில் வழங்கப்பட்டது. 10 ஆயிரம் துணிப்பைகள் வழங் கப்படும் எனவும் அறிவித்தனர்.  ஓவியம், தீ இல்லா சமையல், சது ரங்கப் போட்டிகளில் வெற்றி பெற்ற வர்களுக்கும் விழாவுக்காக 2500 கடி தங்கள் எழுதிய மாணவர்களுக்கும் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. 72 அரங்குகள் ஒரு கோடி புத்த கங்களுடன், 12 நாட்கள் நடைபெற்ற விழாவில் சுமார் 20 ஆயிரம் மாணவர்கள்  பார்த்து புத்தகங்கள் வாங்கி பயன்  பெற்றுள்ளனர். 50 ஆயிரம் பேர் விழா விற்கு வந்துள்ளனர். ரூ. 60 லட்சத்திற்கு புத்தகங்கள் விற்பனையாகின. 35 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தலா ரூ. 1500-க்கு வீட்டுக் ஒரு நூலகம் இல வசமாக வழங்கப்பட்டுள்ளது . இரு பதாயிரம் மாணவர்களுக்கு இலவச புத்தகம் வழங்கப்பபட்டது. இப்படி பல  சாதனைகளின் நிகழ்வே இந்த புத்தகத்  திருவிழா என மேடையில் அறி விக்கப்பட்டது.