கொல்கத்தா
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் மாநிலங்களில் ஒன்றான மேற்கு வங்கத்தில் இதுவரை 1.16 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,428 பேர் பலியாகியுள்ள நிலையில், 86 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுங்கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மிட்னாபூர் தொகுதி எம்எல்ஏ-வாக இருக்கும் சமரேஸ் தாஸ்கரோனா (71) கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.
இதன்மூலம் கொரோனா தொற்றால் மேற்கு வங்கத்தில் உயிரிழந்த எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கெனெவே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தமோனாஸ் கோஷ் என்ற எம்எல்ஏ கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.