கொல்கத்தா
மேற்கு வங்க மாநிலத்தின் 24 பர்கனாஸ் தொகுதியின் ஆளுங்கட்சி (திரிணமூல் காங்கிரஸ்) எம்எல்ஏ-வாக இருப்பவர் தமோனாஸ் கோஷ் (60). வயது மூப்பு காரணமாக தமோனாஸுக்கு ஏற்கெனவே இதயநோய் மற்றும் சிறுநீரக பிரச்சனை இருந்த நிலையில், கடந்த மாதம் கொரோனா தொற்றில் சிக்கி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட பொழுதிலும் உடலு உறுப்புங்கள் அடுத்தடுத்து செயலிழந்த நிலையில், கடந்த மூன்று நாட்களாக கவலைக்கிடமான நிலையில் தமோனாஸ் இருந்தார்.
இந்நிலையில் இன்று அவர் காலமானதாக அவரது குடும்பத்தினர் அறிவித்தனர். தமோனாஸ் மறைவுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். தமோனாஸ் கோஷ் கொரோனாவால் பலியானதால் அவரது குடும்பத்தினர் தனிமையில் வைக்கப்பட்டனர்.