tamilnadu

img

ஆர்எஸ்எஸ்சின் மிதிலாபுரியும் சிவந்தது சங்பரிவாரிலிருந்து விலகி மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தனர்

பத்தனம்திட்டா, ஜுன் 21- கேரளத்தில் உள்ள ஆர்எஸ்எஸ் அமைப்பினரால் அடூரின் மிதிலாபுரி என்று வர்ணிக்கப்படும் தெங்ஙமம் தோட்டுவா தேவி கோவில் அருகில் உள்ள ஆர்எஸ்எஸ் ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக சங்பரிவார் அமைப்புகளில் இருந்து விலகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர். கேரளத்தில் ஆர்எஸ்எஸ்- பாஜக சங்பரிவார் அமைப்புகளில் இருந்து கூட்டம் கூட்டமாக விலகி நூற்றுக்கணக்கானோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து வருகின்றனர். ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தங்களது கோட்டை எனவும் அடூரின் மிதிலாபுரி என்றும் பெருமையாக கூறிவந்த தெங்ஙமம் தோட்டுவா தேவி கோவில் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்எஸ்எஸ்- பாஜக  மற்றும் சங்பரிவார் அமைப்புகளில் இருந்து விலகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர். அவர்களை பரணிக்காவு தேவி கோவில் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் கட்சியின் பத்தனம்திட்டா மாவட்ட செயலாளர் கே.பி.உதயபானு வரவேற்றார்.