திருவனந்தபுரம்:
சட்டமன்ற நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய கேரளத்தில் சபா டிவி துவக்கப்பட்டுள் ளது. அதனை மக்களவை சபாநாயகர் தொடங்கி வைத்தார்.நாட்டிலேயே முதல் முறையாகசட்டப்பேரவை நிகழ்ச்சிகளை மக்கள் நேரடியாக பார்க்கும் வகையில் கேரளத்தில் சபா டிவி தொடங்கப்பட்டுள்ளது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா காணொலி மூலம் இதை தொடங்கிவைத்தார். சட்டப்பேரவைக்கான இணைய தனமும் தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதல்வர் பினராயிவிஜயன் தனது வாழ்த்துறையின் போது, “மாநிலத்திற்கான மதிப்பை பெருமிதத்துடன் உணரும்தருணம் இது. நாட்டிலேயே சட்டமன்றத்திற்கு என தனியாக ஒரு சேனல் தொடங்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறை. நாடாளுமன்றமும், மக்களாட்சியும் நிலைநிற்கும் ஒவ்வொரு நாட்டிலும் அவை நடவடிக்கைகள் மக்களுக்குச் சென்று சேர வேண்டியது மிகவும் முக்கியமானது. ஜனநாயகத்தின் ஆட்சி நீடிக்கும் இந்தகேரள மாநிலத்தில் வெளிப்படை யாக ஆட்சி இருக்க வேண்டும். இங்கு என்ன நடக்கிறது என்பதை மக்கள் நேரடியாக தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே இதன் நோக்கம்” என்றார்.