திருவனந்தபுரம், மார்ச் 9- கோவிட் 19 (கொரோனா) எச்சரிக்கையில் தலைநகரம் உள்ள போதிலும் கேர ளத்தின் புகழ்பெற்ற ஆற்று க்கால் பொங்கல் வழக்க மான உற்சாகத்துடன் திங்க ளன்று நடைபெற்றது. பொ ங்கல் பானையும் மக்கள் கூட்டமுமாக ஞாயிறன்று இரவே திருவனந்தபுரம் நகரம் நிரம்பி வழிந்தது. திங்களன்று காலை 10. 20க்கு ஆற்றுக்கால் அம்மாவி டமிருந்து பகிரப்பட்ட தீச்சுடர் பல்லாயிரக்கணக்கான பொ ங்கல் அடுப்புகளுக்கும் பரவியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான குத்தி யோட்டமும் நடந்தது. இரவு 12.30 மணிக்கு நடக்கும் குருதி சமர்ப்பணத்துடன் திருவிழா நிறைவு பெறும். கேரளத்தல் கோவிட் 19 வைரஸ் மீண்டும் கண்டறிய ப்பட்டுள்ள நிலையில் மிகு ந்த எச்சரிக்கையுடன் சுகாதார நடவடிக்கைகளை சுகாதா ரத்துறையும், மாநகராட்சி யும் இதர துறைகளுடன் இணைந்து மேற்கொண்டன. முழுமையாக நெகிழி இல்லாத பொங்கள் திருவி ழாவாக நடத்தப்பட்டது. சுகா தாரத்துறை, ஆரோக்கிய கேரளம், ஆயுஷ், உணவு பாதுகாப்பு உள்ளிட்ட துறை களின் தலைமையில் நவீன மருத்துவம், ஆயூர்வேதம், ஹோமியோ, சித்தா - யுனானி மருத்துவ முகாம்கள் கோயில் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஞாயிறன்று அமைச்ச ர்கள் கே.கே.சைலஜா, கட கம்பள்ளி சுரேந்திரன், மாவட்ட ஆட்சியர் கே.கோ பாலகிருஷ்ணன் ஆகியோர் ஆற்றுக்கால் கோயிலுக்கு வந்து பொங்கல் விழா ஏற்பாடுகளை பார்வையிட்ட னர்.