tamilnadu

img

கேரள பட்ஜெட் ஒரு தைரியமான மாற்று மக்கள் நலக் கொள்கையை முன்மொழிவதாக பினராயி விஜயன் பாராட்டு

திருவனந்தபுரம், பிப்.8- நாடு மிகக் கடுமையான பொருளாதார மந்தநிலையை எதிர்கொள்ளும்போது, மாற்றுக் கொள்கை மூலம் கேரளத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லவும், சாதாரண மக்களுக்கு மேலும் அதிக வசதி கள் கிடைக்கவும் 2020-21 ஆம் ஆண்டிற்கான கேரள பட்ஜெட்டில் வழிவகுக்கும் என்று முதல்வர் பினராயி விஜயன் கூறினார். பட்ஜெட் திட்டங்கள் மூன்றரை ஆண்டு களுக்குள் மாநிலத்தின் சாதனைகளை ஒருங்கிணைப்பதன் மூலம் விவசாயம், தொழில் மற்றும் சுகாதாரத் துறைகளை மேம் படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. சமூகத் துறைகளின் வளர்ச்சியை அரசு முன்னெடுத்து வருகிறது. பெண்கள் மற்றும் - குழந்தைகள் மற்றும் ஊனமுற்றோரின் நலனுக்கான ஒதுக்கீடு அதிகரிப்பு மற்றும் முதியோர் நலனுக்கான திட்டங்கள் அதைக் குறிக்கின்றன.

நாட்டின் பொருளாதார மந்த நிலையை யும், கேரளா மீதான மத்திய அரசின் அணுகு முறையின் மோசமான தாக்கத்தையும் கருத் தில் கொள்ளும்போதுதான், தைரியமான மாற்று அணுகுமுறையும், மாநில பட்ஜெட் டின் மக்கள் கொள்கையும் இன்னும் தெளி வாகத் தெரியும். மாநிலத்தில் தொடர்ச்சியாக இரண்டு பெருவெள்ளங்கள் ஏற்பட்ட போதி லும், மத்திய அரசு கேரளாவின் கடன் உச்ச வரம்பை கணிசமாகக் குறைத்துள்ளது. வரி பங்கு விகிதங்களும் குறைக்கப்பட் டன. மையப்படுத்தப்பட்ட திட்டங்களுக்கான நிதியுதவி பெருமளவில் நிலுவையாக உள் ளது. பொருளாதார மந்தநிலை காரணமாக மாநிலத்தின் வரி வருவாயும் குறைந்துள்ளது. இத்தகைய பாதகமான சூழ்நிலையிலி ருந்தே வளர்ச்சியும் சமூக நலனும் முன்னெ டுக்கப்படுகிறது. கடலோர தொகுப்பு நிதி, குட்டநாடு, வய நாடு, இடுக்கி தொகுப்புகள், சமூக சமத்துவ மின்மை மற்றும் வளர்ச்சி ஏற்றத்தாழ்வு களைக் குறைக்கவும், விவசாய மீன்வளத் துறையில் அதிக முன்னேற்றத்தை ஏற்படுத்த வும் உதவும் என்று பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வேளாண் துறைக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் அரச கவனம் செலுத்து கிறது. பட்ஜெட்டில் விவசாயத்தை லாபம் ஈட்டக்கூடிய மற்றும் இளைஞர்களை விவ சாயத்திற்கு ஈர்க்கக்கூடிய திட்டங்கள் உள்ளன. அதோடு, பாரம்பரிய தொழில்துறை யின் மறுமலர்ச்சி குறித்தும் பட்ஜெட் கவ னம் செலுத்துகிறது. மத்திய அரசு வெளிநாடுவாழ் இந்தி யர்களை கைவிடுகையில், கேரளத்தின் பொருளாதாரத்திற்கு தூணாக உள்ள அவர் களது நலனில் அரசு அதிக கவனம் செலுத்து கிறது. பட்ஜெட் வெளிநாடுவாழ் இந்தியர் நல னுக்கும், திரும்பி வருபவர்களை மீள்குடி யேற்றுவதற்கும் முன்னுரிமை அளிக்க முயன் றுள்ளது. வெளிநாடுவாழ் இந்தியருக்கான பங்கும் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பெண்கள் சமூகத்தின் மீதான அரசாங்கத் தின் அர்ப்பணிப்பும் அக்கறையும் இந்த பட் ஜெட்டில் பிரதிபலிக்கிறது. திட்ட செலவினத் தில் 18.4 சதவிகிதம் பெண்கள் நலனுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு 11.5 சதவீதமாக இருந்தது. பெண்கள் அதிகாரம் மற்றும் பெண்கள் வாழ்வாதார திட்டங்க ளுக்கு அரசு அளிக்கும் முக்கியத்துவம் முக்கி யமானது. குடும்பஸ்ரீக்கான அதிக ஒதுக்கீட்டில் இருந்து இது தெளிவாகிறது. உயர்கல்வியில் பெரிய மாற்றங்களைச் செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியான பரிந்துரைகளும் பட்ஜெட்டில் உள்ளன. இதே முறையில் அனைத்து துறை களிலும் அரசின் மாற்றுக் கொள்கைகள் மக்கள் நல அணுகுமுறையும் பட்ஜெட்டில் தெளிவாக உள்ளது என முதல்வர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.