கேரள மாநிலத்தின் நிதிநிலை அறிக்கையின் முகப்பு அட்டையில், காந்தி படுகொலை ஓவியம் இடம்பெற்றுள்ளது.
கேரள மாநிலத்தில், நிதிநிலை அறிக்கையை அம்மாநில நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் இன்று சமர்ப்பித்தார். இந்த நிதிநிலை அறிக்கையின் முகப்பு அட்டையில், டாம் வட்டக்குழி வரைந்த ‘காந்தி படுகொலை’ ஓவியம் இடம்பெற்று இருந்தது. இதுகுறித்துப் பேசிய அமைச்சர் தாமஸ், ”டாம் வட்டக்குழியின் ”காந்தி படுகொலை” ஓவியமானது நிதிநிலை அறிக்கையின் முகப்பு அட்டையில் இடம்பெற்றது, ஒரு அரசியல் நிலைப்பாடு. காந்தியை யார் கொலை செய்தார்கள் என்பதை நாங்கள் மறக்க மாட்டோம் என்பதை செய்தியை அனுப்புகிறோம்.
வரலாறு மாற்றி எழுதப்படும் காலத்தில் இதை நினைவுறுத்துவது ஒரு வரலாற்றுக் கடமையாகும். பல முக்கிய நினைவுகளை மறக்கச் செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. என்.ஆர்.சியைப் பயன்படுத்தி, மக்களை மதரீதியாக பிரிக்கும் வேலைகள் நடைபெற்று வருகின்றன. கேரளா ஒன்றுபட்டு நிற்கும்” என்று தெரிவித்தார்.