tamilnadu

img

லைப் மிஷன் மூன்றாம் கட்டத்தில் ஒரு லட்சம் வீடுகள்: கேரள முதல்வர்

திருவனந்தபுரம்:
கோவிட் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் லைப் மிஷன் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தில் நிலமும் சொந்த வீடும் இல்லாதோ ருக்கு ஒரு லட்சம் வீடுகள் ஓராண்டுக்குள் கட்டித் தரப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

கேரளத்தில் வீடற்றோருக்கு வீடுகட்ட லைப் மிஷன் திட்டம் எல்டிஎப் அரசால் துவக்கப்பட்டது. முதல் கட்டத்தில் கட்டத் துவங்கி முடிக்காமல் இருந்த சுமார் ஒரு லட்சம் வீடுகள் கட்டி முடித்து பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. இரண்டாம் கட்டமாக வீடு இல்லாமல் வீட்டுமனை சொந்தமாக உள்ளோருக்கு சுமார் ஒன்றரை லட்சம் வீடுகள் கட்டி வழங்கப்பட்டன. மூன்றாவது கட்டமாக வீடும் நிலமும் இல்லாத ஒரு லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான இடங்கள் தேர்வு செயப்பட்டு கட்டுமான பணிகள் வியாழனன்று துவக்கப்பட்டன.திரிச்சூர் மாவட்டம் பழயனூர் கிராமபஞ்சாயத்தில் அடுக்கு மாடி குடியிருப்புக் கான பணிகளை காணொலி மூலம் முதல்வர்பினராயி விஜயன் துவக்கி வைத்தார். கூட்டுறவுத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்தி ரன் தலைமை வகித்தார். உள்ளாட்சித்துறை அமைச்சர் ஏ.சி.மொய்தீன் அடிக்கல் நாட்டினார். வேளாண்துறை அமைச்சர் வி.எஸ்.சுனில்குமார், கல்வி அமைச்சர் சி.ரவீந்திர நாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், கோட்ட யம் மாவட்டம் எருமேலி ஜமாஅத்தின் தலைமையில் நோன்புகால நன்கொடை மூலம் வாங்கப்பட்ட 55 சென்ட் நிலம் லைப் மிஷன் திட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில் தலா 3 சென்ட் வீதம் 12 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். பொது பயன்பாட்டுக்கு 7 சென்ட் ஒதுக்கி வைக்கப்படும். அய்மனம் பஞ்சாயத்தில் உள்ள கோட்டயம்ரோட்டரி இன்டர்நேஷனல் தலா ரூ .6 லட்சம்செலவில் 18 வீடுகளை கட்ட முன்வந்துள் ளது என்றும் முதல்வர் கூறினார்.