tamilnadu

img

கோவிட் கட்டுப்பாடுகளுடன் ஓணம் பண்டிகை கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்படும் : முதல்வர்

திருவனந்தபுரம், ஆக.18- முதலமைச்சர் பினராயி விஜயன் தலை மையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டம், கோவிட் விதிமுறைகளுக்கு இணங்க மக்களு க்கு வசதியான முறையில் ஓணம் கொண்டாடு வதற்கான ஏற்பாடுகளை செய்ய முடிவு செய்தது. கோவிட் அதிகரித்து வரும் சூழ்நிலை யையும்  ஓணத்தையொட்டி மக்கள் கூடு வதையும் கருத்தில் கொண்டு கோவிட் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வலுப் படுத்தப்படும். இதற்காக, வர்த்தகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் கூட்டத்தை கூட்டு மாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.  பொது இடங்களில் தனிமனித இடைவெளி பராமரிக்கப்படுவதை காவல் துறை உறுதி செய்ய வேண்டும்.  ஏற்கனவே நடந்த கொண்டாட்டங்களுக்கு வரையறுக்கப்பட்டபடி பொது இடங்களில் கொண்டாட்டங்கள் கூடாது.

பொது இடங்க ளில் ஓணம் விருந்து நடத்தக்கூடாது. கடைகள் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்தி ருக்கும். பொருட்களை வீடுகளுக்கே விநியோ கிப்பதை ஊக்குவிக்க வேண்டும். தனிமனித இடைவெளியை பின்பற்றி ஓட்டல்களில் உணவருந்தலாம். இரவு 9 மணி வரை ஓட்டல்கள் திறந்தி ருக்கும். பெரும்பாலான ஓட்டல்களும் ரிசார்ட்டுகளும் மூடப்பட்டுள்ளன. இவை கிருமி நீக்கம் செய்யப்பட்டு கோவிட் வழி முறைகளை பின்பற்றி திறக்க அனுமதிக்கப் படும். ஓணம் சீசன் என்பதால் மற்ற மாநிலங்க ளிலிருந்து பலவகையான பூக்கள் கொண்டு வரப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகள் எடுக்க சுகாதாரத் துறை வழி காட்டுதல்களைத் தயாரிக்க வேண்டும் என்று முதல்வர் கூறினார். கோவிட் -19 ஆய்வுகளை அதிகரிக்க மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சுகாதாரத் துறைக்கு அவர் உத்தரவிட்டார். ஓணம் என்பதால் பலர் வெளியில் இருந்து மாநி லத்திற்கு வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை   செய்து அவர்களுக்கு சோதனைகள் நடத்து மாறு  சுகாதாரத் துறைக்கு முதல்வர் அறி வுறுத்தினார். கோவிட்டின் முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகளை இளைஞர்கள் போதுமான அளவு பின்பற்றுவதில்லை என்ற பொது வான கருத்து உள்ளது.

எனவே, முக கவசம் அணிவது உள்ளிட்ட பிரச்சாரத்தை சம்பந்தப்பட்ட துறைகள்  நடத்த வேண்டும். பூஜப்புரா மத்திய சிறையில் கோவிட் அதிகரித்துள்ளதால் அங்கு கோவிட் முதல் வரிசை சிகிச்சை மையம் அமைக்கப்படும். கோவிட் -19 படைப்பிரிவின் சிறப்புக் குழு சிறையில் நிறுத்தப்படும்.      65 வயதுக்கு மேற்பட்ட கைதிகளுக்கு பரோல் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கூடுதல் உள்துறை, கூடுதல் தலை மைச் செயலாளர் மற்றும் சிறைச்சாலையின் டி.ஜி.பி. தலைமையிலான குழு ஆய்வு செய்யும்.  சிறைகளில் கோவிட் பரவி வரும் சூழ்நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. சில மாவட்டங்களில், மீனவர்கள் கடலுக்குச் செல்வதற்கு முன்பு கோவிட் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்கிற  கட்டுபாடு கைவிடப்படுகிறது என்றும் முதல்வர் கூறினார். தலைமைச் செயலாளர் டாக்டர் விஸ்வாஸ் மேத்தா, மாநில காவல்துறைத் தலைவர் லோக்நாத் பெஹ்ரா, வருவாய் முதன்மை செயலாளர் டாக்டர்  ஏ.ஜெய திலக், சுகாதாரத் துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராஜன் கோப்ராகடே மற்றும் பலர் கலந்து கொண்டனர்.