உலகம் முழுவதுமுள்ள மலையாள மொழிபேசும் சகோதரர்-சகோதரிகள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும் தமிழக மக்கள் சார்பிலும் நெஞ்சார்ந்த சகோதரப்பூர்வ ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியாவில் பன்முகப் பண்பாட்டைப் பறைசாற்றும் விழாக்களில் ஒன்றாக ஓணம் திருநாள் விளங்குகிறது. இந்த திருநாளன்று வாசலில் அலங்கரிக்கப்படுகிற அத்தப்பூக் கோலம்போல அனைத்துப் பகுதி மக்களின் வாழ்க்கையும் வண்ணமயமாக விளங்கிட வேண்டும். கேரளத்தில் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு தொடர்ந்து இரண்டாவதுமுறையாக பொறுப்பேற்றுள்ளது மகிழ்ச்சிக்குரியது. கொரோனா எனும் கொடும்தொற்று உள்பட பேரிடர்களைஎதிர்கொண்டு சமாளிப்பதில் உலகத்திற்கே முன்னுதாரண மாக கேரள அரசு விளங்குகிறது. நாட்டிற்கே எடுத்துக்காட்டாக பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் சமூக நீதிப்பாதையில் மைல்கல்லாக அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆக்கியது என சோதனையான காலத்திலும் சாதனை படைக்கிறது இடது ஜனநாயக முன்னணி அரசு.மக்கள் ஒற்றுமை மதச்சார்பின்மை மத நல்லிணக்கம் என அரசியல் சட்டத்தின் விழிமியங்களை உயர்த்திப் பிடித்துவரும் கேரள மக்களுக்கு மீண்டும் ஒருமுறை ஓணம்திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.