திருவனந்தபுரம், ஜுன் 21- கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைல ஜாவை நிபா ராஜகுமாரி கோவிட் ராணி என்று தர மற்ற முறையில் இழிவு படுத்த முயன்றபோது இயல்பாக முதலில் எதிர்வினையாற்றியிருப்பது லினியின் குடும்பம். அந்த குடும்பத்திற்கு எதி ராக போராட்டம் நடத்தும் மோசமான நிலைக்கு சென்ற காங்கிரஸ் எந்த வகையான எதிர்கட்சி தர்மத்தை கடைப்பிடிக்கிறது என கேரள முதல்வர் பினராயி விஜயன் கேள்வி எழுப்பினார். காங்கிரஸ் தலைவர்களின் இத்தகைய செய்திகள் குறித்து அர சியல் பகைமையில் கூறுவதல்ல. கோவிட் எதிர்ப்பு போராட்டத்தில் முன்னால் நிற்கும் சுகாதாரத்துறை அமைச்சரைக் குறித்து பொறுப்பான இடத்தில் இருக்கும் தலைவர்கள் நடத்தும் அத்துமீறல்கள் என்னென்ன? அவற்றால் ஏற்பட்டுள்ள பயன் என்ன என்றும் முதல்வர் கேட்டார்.
திருவனந்தபுரத்தில் சனியன்று நடந்த செய்தி யாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியதாவது: சாதா ரணமாக ஒரு அமைச்சருக்கு எதிராக எதிர்கட்சி யின் தலைவரது தரக்குறைவான விமர்சனம் என்கிற நிலையில் இதை பார்க்க முடியாது. கேரளாவைப் பற்றி நல்ல விஷயங்களைக் கேட்பது வருத்த மளிப்பதாகக் கூறும் ஒரு தலைவரின் வெளிப்படை யான அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என்பதா கும். கேரளத்தைக் குறித்து உலகில் நல்லவிதமான கருத்து ஏற்படுவது நமக்கெல்லாம் பெருமை அளிப்பதாகும். அது தன்னை எரிச்சலூட்டுகிறது என்று அவர் கூறுகிறார். எரிச்சல் அடைவதால் அவ ரது தசைகள் கிளர்ச்சி அடைந்து கூடுதலாக வேலை செய்யும் என்பதை தவிர மலையாளிகளிடம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றார் முதல்வர்.
நாக்கின் விலையும் நிலையும்
மேலும் அவர் கூறுகையில், இந்த அரசுடன் எவ்வித அனுதாபம் காட்டாத நாளிதழின் (மலை யாள மனோரமா) தலையங்க வாசகத்தை கவனிக்க வேண்டும்: வெளிநாடுவாழ் மலையாளிகளை மத்திய மாநில அரசுகள் அவமதிப்பதாக குற்றம் சாட்டி சென்னித்தலா நடத்திய உண்ணாவிரதத்தை தொடங்கி வைக்கும்போது முல்லப்பள்ளி பேசி யது கட்சிக்கு மட்டுமல்ல நாட்டுக்கே பெரும் அவப்பெயரை ஏற்படுத்துகிறது. அன்று நிபா ராஜ குமாரி, இன்று கோவிட் ராணி என்கிற பதவிக ளுக்காக சுகாதார அமைச்சர் முயற்சிப்பதாக கூறு கிறார். சொந்த நாக்கின் விலையும் நிலையும் ஒவ்வொருவரும் பகுத்தறிய வேண்டும். அவம திக்கும் வார்த்தைகளை ஒரு பெண்ணுக்கு எதி ராக பயன்படுத்தும்போது அது அவமானகர மாகிறது.
அரசின் நிலைபாடுகளில் முரண்பட்டு பேசும்போது அது கண்ணியத்துடனும் மரியாதையு டனும் இருக்க வேண்டும். நிபா போராளிகளின் மனதிடத்தை கெடுப்பதாக கேபிசிசி தலைவரின் வார்த்தைகள் உள்ளதாக அந்த தலையங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. கேரளத்தைக் குறித்த நல்ல வார்த்தைகள் எரிச்ச லூட்டுகிறது என்றால் எந்த அளவுக்கு மோசமான மனம் அது?. அவரை சகிப்புத்தன்மை அற்றவராக்கு வது எது? கேரளம் உலகுக்கே முன்மாதிரி ஆகிறதே என்பதும், பெண்களுக்கு எதிரான அவரது மன நிலையின் பிரதிபலிப்பும்தான். இப்படித்தான் நீங்கள் பெண்களை பார்க்கிறீர்களா?. இப்படி கூறி னால்தான் அணிகளின் கைதட்டல் கிடைக்கும் எனக்கருதி அவர் கூறுவதுண்டு. இப்போது அது தரமற்ற பேச்சாகிவிட்டது. அமைச்சரைப் பற்றிய விமர்சனம் மட்டுமல்ல இது, கேரளம் முதலிடம் பிடித்ததை ஏற்க முடியாததால் ஏற்பட்டுள்ள எரி ச்சலுமாகும்.
தலைமுறை காணா துயரம்
நோய் வரும்போது ஒன்றுபட்டல்லவா நிற்க வேண்டும்?. அந்த வகையில் இது ஒட்டுமொத்த கேர ளத்துக்கும் அவமானகரமாகிறது. உலக சமூ கத்தின் முன்பு கேரளத்தை சிறுமைப்படுத்துவதா கும். உலகம் கொள்ளை நோயை எதிர்கொள்கிறது. இன்றைய தலைமுறை இப்படி ஒரு துயரத்தை பார்த்ததில்லை. துவக்கத்தில் இருந்தே அரசு அப்படித்தான் அதை அணுகியது. முதல்வரும் எதிர்கட்சி தலைவரும் ஒரே கூட்டத்தில் இருந்து விவாதித்தனர். முரண்பாடுகள் ஏராளம் இருந்தாலும் மத்திய அரசுடன் முழுமையான ஒத்துழைப்பு அளிக்கப்பட்டது. விவாதங்களுக்கு இட்டுச் செல்லவில்லை. ஆனால், அரசின் நிலை பாடுகளை தகர்க்க எதிர்கட்சி தொடர்ந்து முயன்றது. நீங்கள் மறந்துவிட்டீர்களா என்பது தெரியாது.
கொரோனா காலத்தில் நடந்த கேபிசிசி கூட்டத்தில், கொரோனாவுக்கு எதிரான நன்மதிப்புகளை (கிரெடிட்) அரசு எடுத்துக்கொள்ள அனுமதிக்கக் கூடாது என முடிவு செய்தவர்கள் இவர்கள். கொ ரோனாவால் ஆபத்து குறைவு என்று கூறியவர்தான் எதிர்கட்சி தலைவர். கொரோனா ஆபத்து நிறைந் தது என்கிற கருத்தே சரி என்பதை அவரது கட்சியி னர் இப்போது கூறுவார்களா?. அமெரிக்காவை யும், தமிழ்நாட்டையும், ராஜஸ்தானையும் முன்மாதி ரியாக கொள்ள வேண்டும் என்று கூறினர். விவ ரங்களை அன்றாடம் தெரிவிப்பதை மீடியா மேனியா என கிண்டல் செய்தனர். நிவாரண நிதிக்கு பணம் கொடுக்க கூடாது என்று கூறினார்கள். பல்வேறு பொய் பிரச்சாரம் செய்தவர்கள் இவர்கள். சேலரி சேலஞ்ச் வந்தபோது, அதனை சீர்கு லைக்க முன்னின்றனர். அதற்கான அரசு ஆணையை எரித்தனர். வெளிநாடுகளில் வசிப் போரை அழைத்துக்கொண்டு வரும் இந்த கட்டத்தில் நோய் உள்ளவர்களும், இல்லாதவர்க ளும் ஒரே விமானத்தில் பயணம் செய்வதை தவிர்க்க பரிசோதனை தேவை என்று கூறிய தற்கும் எதிர்ப்பு.
ஊடகங்களுக்கு அவமதிப்பு
கோவிட்டின் துவக்க நிலையில் அரசு எச்ச ரிக்கை விடுத்தபோது சில தலைவர்கள் விஞ்ஞானி களாக களமிறங்கினர். 30 டிகிரி வெப்பத்தில் கொ ரோனா பரவாது, அரபு நாடுகளில் கொரோனா பர வாது என்றெல்லாம் அவர்கள் பிரச்சாரம் செய்தார்கள். பிம்பத்தை உயர்த்திக்காட்ட முதல்வர் பிஆர் (மக்கள் தொடர்பு) ஏஜென்சியை நிய மித்தார் எனவும், செய்தியாளர் சந்திப்பில் ஊட கங்கள் பங்கேற்க பணம் கொடுப்பதாகவும், சர்வ தேச ஊடகங்களில் கேரளத்தைக் குறித்து வரும் நல்ல செய்திகள் பிஆர் ஏஜென்சி மூலமாக எனவும், செய்தியாளர் சந்திப்பில் முதல்வர் சிரிப்பது செய்தி ஏஜென்சி கூறுவதுபோல் எனவும் இவர்கள் ஊதிப்பெருக்கினார்கள். 42 சர்வதேச ஊடகங்க ளில் பிஆர் ஏஜென்சி மூலம் விளம்பரம் கொடுத்ததா கவும், அது தங்களை சீற்றத்துக்கு உள்ளாக்கிய தாகவும் கேபிசிசி தலைவர் பேசினார்.
ஒரு வகை யில் சிந்தித்தால் இமு உலகெங்கும் உள்ள ஊட கங்களை அவமதிப்பதாகும். இதர மாநிலங்களில் இருந்து வரும் நமது சகோதரர்களின் பாதுகாப்புக் காக அனுமதி சீட்டு ஏற்பாடு செய்தபோது இவர்கள் என்னவெல்லாம் செய்தார்கள். அவர்க ளின் செயல்களால், நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் அச்சத்தில் வாழும் நிலை ஏற்பட்டது. எஸ்எஸ்எல்சி – பிளஸ் டூ தேர்வுகள் நடத்த முயன்றபோது ‘பைத்தியம்’ என காங்கிரஸ் தலை வர் ஒருவர் கூறினார். முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, கேபிசிசி தலைவர், எதிர்கட்சி தலை வர் எல்லோரும் சேர்ந்து தேர்வு கூடாது என்றார் கள். அதன்பிறகு, மத்திய அரசு வழிபாட்டுத்தலங் களை திறக்கலாம் என முடிவு செய்தபோது, ஏற்க னவே திறக்க வேண்டும் எனக்கூறிய எதிர்கட்சி தலை வரும் முன்னாள் முதல்வரும் என்ன கூறினார்கள் என்பது நினைவுக்கு வரவில்லையா? எதற்காக திறக்கிறீர்கள் என்றுதானே கேபிசிசி தலைவர் கேட்டார்.
விளம்பர போதை
இவை அனைத்தும் முடிந்த பிறகுதான் வெளி நாடுவாழ் மலையாளிகள் பிரச்சனை வருகிறது. வியாழனன்று எதிர்கட்சி தலைவர் தலைமை செயலகம் முன்பு போராட்டம் நடத்தினார். எத்தனை மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. கேமரா சட்டகத்துக்குள் வரவேண்டும் என்பற்காக அவர்கள் முண்டியடித்த நெரிசல் நாமெல்லாம் பார்த்ததுதானே? தனிமனித இடைவெளி பின்பற்ற வேண்டிய நேரமல்லவா இது? இவற்றை பார்க்கும் உங்களது ஆதரவாளர்கள் எப்படி நடந்து கொள்வார்கள்? எதற்காக இந்த போதை? கேர ளத்தில் அண்மைக் காலத்தில் நடந்த போராட்டங்க ளில் மிக அதிகமானோர் பங்கேற்ற போராட்டத்தை சிபிஎம் நடத்தியது. துல்லியமான இடைவெளியை பின்பற்றி அந்த இயக்கம் நடைபெற்றது என முதல்வர் சுட்டிக்காட்டினார்.