திருவனந்தபுரம்:
கோவிட் காலத்திலும் முடங்காத பொதுக்கல்வியின் கேரள மாதிரியை யுனிசெப் ஆவணப்படுத்தி உலகிற்கு காட்ட முன்வந்துள்ளது.கொள்ளைநோயை எதிர்கொள்வதில் உலகம் முழுவதும் உள்ள ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தியபோது கேரளம் சுகாதாரத்தையும் கல்வியையும் ஒரே நேரத்தில் பாதுகாத்துள்ளதாக யுனிசெப் மதிப்பீடு செய்துள்ளது. அதனால்தான் கேரளத்தின் சாத னையை ஆவணப்படுத்த யுனிசெப் முன்வந்திருக்கிறது. குழந்தைகளின் கல்வி ஒருநாள்கூட முடங்கிவிடாதபடி ஜுன் முதல் நாளிலேயே கேரளத்தில் வகுப்புகள் துவக்கப் பட்டன.
ஆன்லைன் வகுப்புகள், விக்டேர்ஸ் டிவி சானலின் செயல்பாடு, ஆன்லைன் பாடபுத்தகம், சமூகநீதி, காவல்துறை, பெண்கள்குழந்தைகள் மேம்பாட்டு துறைகளின் தலையீடுகள், புதிய கல்விமுறையில் கற்றலுக்கு வாய்ப்பற்ற 2.5 லட்சம் குழந்தை களுக்கு டிஜிட்டல் வசதிகளை செய்து கொடுத்த அக்கறை, முன்மாதிரியாக வகுப்புகளை நடத்திய ஆசிரியர்கள் போன்ற விவரங்களை யுனிசெப் சேகரித்து வருகிறது. மூன்று வாரங்களில் இவற்றை ஆணப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அகிலா ராதாகிருஷ்ணன்
கேரளத்தில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு வீடுகளில் உணவு ஒப்படைத்த தும், ஆன்லைன் கற்பித்தலும் முன்மாதிரி யானவை. உலகம் முழுவதும் 15 லட்சம் பள்ளிக்கூடங்கள் கோவிட்டைத் தொடர்ந்து மூடப்பட்டன. ஆனால், இங்கு (கேரளம்) குழந்தைகளின் படிப்பு முடங்கவில்லை. இதுபெரிய சாதனை என்கிறார் யுனிசெப் அமைப்பின் கேரள-தமிழ்நாடு சமூக கொள்கை வகுப்பு வல்லுநர் அகிலா ராதாகிருஷ்ணன்.
டாக்டர் ஜே.பிரசாத்
பொதுக் கல்வித் துறையை வலுப்படுத்து வதற்காக அரசு உருவாக்கிய வழிமுறைகள் உலகத்தின் முன்பு வைக்கப்படும் போது, நெருக்கடியின் எல்லா காலங்களிலும் கேரளாவை உலகம் நினைவில் கொள்ளும் என்கிறார் எஸ்சிஇஆர்டி இயக்குநர் டாக்டர் ஜே.பிரசாத்.
எழுத்து மரம்
ஊரடங்கு காலத்தில் வீடுகளுக்குள் முடங்கிய குழந்தைகளின் படைப்புத்திறன் களை வெளிப்படுத்த கல்வி அமைச்சர் சி.ரவீந்திரநாத் முன்வைத்த ‘எழுத்து மரம்’ திட்டத்தின் வெற்றியையும் யுனிசெப் பதிவு செய்கிறது. குழந்தைகளின் இத்தகைய படைப்புகளை மட்டுமே உட்படுத்தி 10 புத்தகங்களை எஸ்சிஇஆர்டி (SCERT) வெளியிட்டுள்ளது. கோவிட் காலத்தில் அரசு பிறப்பித்த உத்தரவுகள் முதல், பொதுக் கல்விஅமைச்சர் குழந்தைகளுடன் ஆன்லைனில் பேசுவது வரை அனைத்தும் ஆவணப்படுத்த யுனிசெப் திட்டமிட்டுள்ளது.