tamilnadu

img

காந்திஜியையும் கோட்சேவையும் ஒப்பிடுவது தேசத்திற்கே அவமானம்

திருவனந்தபுரம்:
மகாத்மா காந்தியை மேலும் புரிந்துகொள்வது அவர் உயர்த்திப்பிடித்த மதச்சார்பின்மை உள்ளிட்ட சமூக மதிப்பீடுகளை பரந்து பட்ட மக்கள் மத்தியில் கொண்டு செல்ல உதவும். மக்கள் நலனுக்காக தனதுஉயிரைக்கூட பலியிடத்தயார் என பிரகடனம் செய்து அவரது பிறந்தநாளை அர்த்தமுள்ளதாக்க வேண் டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த ஆண்டை ஒட்டி வெள்ளியன்று கேரள சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. கேள்வி நேரம் உள்ளிட்ட நடவடிக்கைகளை ரத்து செய்துவிட்டு காந்திஜியை நினைவு கூர்ந்து சபாநாயகர் பி.ஸ்ரீராமகிருஷ்ணன், எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னித் தலா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களும் பேசினர்.முக்கிய உரை நிகழ்த்தியமுதல்வர் பினராயி விஜயன் மேலும் பேசியதாவது: மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் நினைவு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. ஒற்றை நூலால் கட்டப்பட்ட பூக்களைப் போலவே, இந்தியாவில் வேறுபட்ட சமூகங்களில் உள்ள மக்களை தேசிய இயக்கத்தின் பாதையில் கொண்டுவந்தவர் காந்திஜிதான்.

கேரளத்துடன் காந்தியின் உறவு
காந்திஜி கேரளாவுடனும் நமது சமூக சீர்திருத்த இயக்கங்களுடனும் நெருக்கமான உறவுகளை வைத்திருந்தார். 1925இல் அவரது வருகை வைக்கம் சத்தியாக்கிரகம் தொடர்பானது. இதே வருகையின் போது தான் அவர் சிவகிரிக்குச் சென்று ஸ்ரீ நாராயண குருவைச் சந்தித்தார். காந்திஜி மொத்தம் ஐந்து முறை கேரளாவுக்கு விஜயம் செய்தார்.முதல் வருகை 1920 ஆகஸ்ட்18,19 இல் ஆகும். கூடுதல்நாட்களில் அவர் மேற்கொண்ட மற்ற நான்கு வருகைகளின் போது, ‘ஹரிஜன்ஸ்’ என்று அழைக்கப்பட்ட தலித் பிரிவினரை சந்திப்பதில் பிடிவாதமாக இருந்தார். தீண்டாமை ஒழிப்பு, ஆலய நுழைவு போன்ற விஷயங்களில் மாநில ஆட்சியாளர்களுடன் கலந்தாலோசிக்க இந்த வாய்ப்பை பயன்படுத்தினார். மறுமலர்ச்சி இயக்கத்திற்கான உந்துதலையும் உத்வேகத்தையும் அது அளித்தது. வைக்கம் சத்தி யாக்கிரகத்தை ஊக்கப் படுத்தியது. உச்சநிலையில் இருந்த வகுப்புவாதத்தை முறியடிப்பது என்கிற முழக்கம்வலுப்பெற்றது. அதையேபொருளாதார ஏற்றத்தாழ்வு களை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்கிற உள்ளடக்கத்துடன் கேரளம் முன்னெடுத்தது. அதன்படி நிலப்பிரபுத்துவ  உடைமை யாளர்களின் விஷப்பற்களை அகற்றுவதற்கான, நில உச்சவரம்பு நிர்ணயம் செய்வதற்கான விவசாயசட்டம் அறிமுகப்படுத்தப் பட்டது. அதற்கு அடுத்த முன்னேற்றமாக, கோயில்களுக்கு அருகில் நடந்துசெல்ல உரிமை மறுக்கப் பட்டவர்களுக்கு- தீட்டு கற்பித்து விலக்கி வைக்கப்பட்டவர்களும் கரு வறைக்குள் சென்று பூஜை செய்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டது. காந்திஜியின் கனவு நனவானது. 
காந்திஜி கடைசியாக யுனிவர்சிட்டி அரங்கிற்கு வருகை தந்து பேசினார். ‘இதுவரை வந்தது ஒரு போராளியைப்போல் என்றால் இம்முறை இங்கு வந்தது புனித பயணியைப் போல’ என்று கூறியது அங்குதான். ஆலய நுழைவால் ஏற்பட்ட மகிழ்ச்சியை அந்த வார்த்தைகள் மூலம் ெவளிப்படுத்தினார். ‘தீட்டுசாதியினர்’ என்று அன்றுமுத்திரை இடப்பட்டவர் களுடன் கோயிலுக்குள் சென்றதும், வைக்கத்தில் பிராமணிய சமூகத்தினரோடு தீண்டாமையை நியாயப் படுத்தும் எதுவும் பிராமண கிரந்தங்களில் இல்லை என வாதிட்டு நிறுவியதும், அய்யன்காளியை வெங்ஙா னூரில் சந்தித்ததும் எல்லாம் காந்திஜியின் மரபு, மறு மலர்ச்சிக்காக நிற்கும் சக்தி களுக்கு சொந்தமானது என்று மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. 

ஐன்ஸ்டினின் அச்சம்
‘ரத்தமும் சதையுமாக இப்படி ஒருவர் இந்த பூமியில் வாழ்ந்தார் என்பதே வரும் தலைமுறையினரால் நம்ப முடியாமல் போகும்’, என்று மகாத்மா காந்தி குறித்து விஞ்ஞானி ஆல்பர்ட்ஐன்ஸ்டின் கூறினார். மாறி வரும் தலைமுறையால் காந்திஜியை புரிந்து கொள்ள முடியாமல் போகலாம் என்கிற அச்சத்தையேஐன்ஸ்டின் வெளிப் படுத்தினார். அவர் கொண்டிருந்த அச்சம் எதார்த்தமாகி விடுமோ என்று கவலைப்பட வேண்டிய கட்டமாகும் இது. அதிகாரத்தில் உள்ள சிலரே காந்திஜியின் சித்திரத்தை அடையாளப் பூர்வமாக நிறம் மாற்றுவதை பார்த்துக்கொண்டிருக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. காந்திஜியை கொன்ற வனுக்கு கோயில் கட்டுவதும், நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னாவை அந்த குற்றவாளிக்கு வழங்க வேண்டும் என்கிற கூக்குரல் எழுவதை கேட்கும் அவலமும் ஏற்பட்டுள்ளது.நாட்டு மக்கள் மறக்க கூடாத பல்வேறு விசயங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் சாவர்க்கரின் படம் திறக்கப்பட்ட நிகழ்வு. அந்தமான் சிறையில் ஆங்கிலேயர்களால் நரக வேதனைக்கு உள்ளாக்கப்பட்ட போதும் மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுக்காத ஒரு மலையாளி எம்.பி.நாராயண மேனன். மறுத்த அவரை குதிரை வண்டியில் கட்டி இழுத்துச் சென்றனர். யாருடைய படத்தையாவது வைக்க வேண்டும் என்றால்நாடாளுமன்ற மைய மண்டபத்தில் எம்.பி.நாராயண னின் படத்தை வைத்திருக்க வேண்டும். அதல்லாமல்  காந்திஜி கொலையில் சதித் திட்டம் தீட்டிய குற்றவாளி யான ஒருவருக்கு அல்ல. காந்திஜியையும் கோட்சேவையும் ஒப்பிடு வதைப்போன்ற அவமானம் வேறில்லை.  

பிரச்சாரம்
காந்தியின் நினைவாக போதை மருந்து இல்லாத புதிய கேரளத்தை நிறுவுவதற்கான பணியின் ஒரு பகுதியாக 90 நாள் தீவிர விழிப்புணர்வு திட்டத்தை மேற்கொண்டு வருகிறது. இது கேரள அரசாங்கத்தின் “விடுதலை” திட்டத்தின் ஒருபகுதியாகும். புதிய தலைமுறையினர் நல்லொழுக்கத்தின் சூழலில் வளர வேண்டும் என்று காந்திஜி கனவு கண்டார். காந்திஜி யின் நினைவு நாளான ஜனவரி 30 வரை தொடரும் வகையில் போதை ஒழிப்பு பிரச்சாரம் நடைபெறும். இதன் மாநில அளவிலான துவக்கம் நவம்பர் 17ஆம் தேதி நடைபெறும்.இவ்வாறு அவர் பேசினார்.