tamilnadu

img

கோவிட் தொடர்பு: 3 எம்பிக்கள், 2 எம்எல்ஏக்கள் தனிமையில் செல்ல சுகாதாரத்துறை உத்தரவு

பாலக்காடு, மே 14- வாளையாறில் அனுமதி இல்லாமல் கேர ளத்துக்குள் நுழைய முயன்றவர் கோவிட் நோயாளி என்பது உறுதி செய்யப்பட்ட தைத் தொடர்ந்து அவருடன் சேர்ந்து போராட் டத்தில் ஈடுபட்ட 3 எம்பிக்கள் 2 எம்எல்ஏக் கள் உட்பட அனைவரும் தனிமையில் செல்ல வேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவிட் டுள்ளது. வெளி மாநிலங்களிலிருந்து கேர ளத்துக்கு வருவோர் உரிய அனுமதி பெற வேண்டும் என்பது நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவின் பகுதியாகும். அதன்படி தினமும் ஆயிரக்கணக்கானோர் முறையான அனுமதியுடன் சொந்த ஊர் களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். ஆனால், கேரளத்தைச் சேர்ந்த சிலர் தமி ழக எல்லையான வாளயாறு சோதனைச் சாவடி வழியாக கடந்த 9 ஆம் தேதி கேர ளத்தில் நுழைய முயன்றனர். அவர்களுடன் இணைந்து காங்கிரஸ் கட்சி கூட்டணியினர் (யுடிஎப்) போராட்டமும் நடத்தினர்.

இந்நிலை யில் அனுமதியின்றி கேரள எல்லையில் சிக்கிய மலப்புறத்தைச் சேர்ந்த ஒருவருக்கு 12 ஆம் தேதி கோவிட் தொற்று உறுதி செய் யப்பட்டது. இந்நிலையில் அந்த நபருடன் நெருக்க மாக நின்று போராட்டத்தில் ஈடுபட்ட நாடாளு மன்ற உறுப்பினர்கள் வி.கே.ஸ்ரீகண்டன், டி.என்.பிரதாபன், ரம்யா ஹரிதாஸ், சட்ட மன்ற உறுப்பினர்கள் ஷாபி பரம்பில், அனில் அக்கர மற்றும் போராட்டத்தில் பங் கேற்றவர்கள், அன்றைய தினம் எல்லை யில் இருந்து காவல்துறையினர், செய்தி யாளர்கள், பொதுமக்கள் உட்பட அனை வரும் 14 நாட்கள் வீடுகளில் தனிமையில் செல்லுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. பாலக்காடு மாவட்ட ஆட்சியர் டி.பாலமுரளி யின் உத்தரவின் பேரில் மாவட்ட மருத்துவ அலுவலர் தலைமையில் நடந்த மருத்து வக்குழு கூட்டம் சம்பந்தப்பட்டவர்கள் டிஎம்ஓ அலுவலகத்தை உடனடியாக தொடர்பு கொள்ளுமாறும் உத்தரவிட்டுள்ளது.

எம்பியின் பொய் பிரச்சாரம்
மே 9 ஆம் தேதி வாளயார் சோதனைச் சாவடிக்கு வந்த சிலரிடம் கேரளத்திடமி ருந்து பெற வேண்டிய அனுமதி உத்தரவு இல்லை. அவர்கள் எல்லை கடந்து செல்ல தமிழக காவல்துறையினர் அனுமதிக்க வில்லை. தகவல் அறிந்த யுடிஎப் தலை வர்கள் எல்லை கடந்து வந்து தமிழக காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். தமிழக காவல்துறையினர் தடியடி நடத்துவதாக மிரட்டுகின்றனர் என பொய் பிரச்சாரம் நடத்தி சுமார் 150 காங்கிரஸ் கட்சி யினரை அந்த பகுதியில் திரட்டினர். இதற் காக டி.என்.பிரதாபன் எம்.பி செல்பேசியில் அழைப்பு விடுக்கும் காட்சி ஊடகங்களில் ஒளிபரப்பாகி பரபரப்பை ஏற்படுத்தியது.