புதுச்சேரி, ஏப்.1- இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த அனைவரும் கண்காணிக்கப்படுகின்றனர்.
தில்லி தில்லி சென்று திரும்பிய புதுச்சேரியைச் சேர்ந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் வசித்து வந்த அரியாங் குப்பம் சொர்ணா நகர் பகுதி சீல் வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அப்பகுதி முழுவதும் காவல்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
புதுச்சேரியில் கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்த பெண் வீடு திரும்பிய நிலையில், புதிதாக 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டிருக்கிறது.