கரூர், ஆக.16- மின் ஊழியர் மத்திய அமைப்பின் துணைத் தலைவர் பழனிவேல் தலைமையில் வரும் 17 முதல் 19-ம் தேதி வரை நெல்லையில் நடைபெற உள்ள மின் ஊழியர் மத்திய அமைப்பின் 16-வது மாநாட்டில் ஏற்றப்பட உள்ள, திருவண்ணாமலையிலிருந்து எடுத்து வரப்பட்ட தோழர் து.ஜானகிராமன் நினைவுக் கொடி பயணக் குழுவிற்கு கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு சங்கத்தின் கரூர் கிளை தலைவர் பெருமாள் தலைமையில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. கரூர் கிளையின் செயலாளர் தனபால் வரவேற்று பேசினார். ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் நிர்வாகி குமரேசன், சிஐடியு மாவட்ட செயலாளர் சி.முருகேசன், மாவட்ட தலைவர் ஜி.ஜீவானந்தம் ஆகியோர் உரையாற்றினர். பொறியாளர் சங்க அமைப்பின் நிர்வாகி கோபாலகிருஷ்ணன், போக்குவரத்து சங்க நிர்வாகி பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பயணக் குழு தலைவர் பழனிவேல் சிறப்புரையாற்றினார். சரவணக்குமார் நன்றி கூறினார். திருச்சி துறையூர் பேருந்து நிலையம் அருகில் மத்திய அமைப்பின் மெட்ரோ கிளை சார்பில் வியாழனன்று சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ரவி தலைமை வகித்தார். சந்திரன் வரவேற்றார். வட்ட செயலாளர் செல்வராஜ், மாநில துணைத்தலைவர் ரெங்கராஜன், சிபிஎம் ஒன்றிய செயலாளர் ஆனந்தன், டிசிடிசி நடராசன், சங்கிலி, செல்வம், பன்னீர்செல்வம், சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். தஞ்சை மாவட்டத்தில் மாரியம்மன் கோவில் மின்வாரிய அலுவலகத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு, தஞ்சை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலக வாயிலில் சிஐடியு மாவட்ட தலைவர் து.கோவிந்தராஜூ தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால், மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்ட தலைவர் அதிதூத மைக்கேல்ராஜ், மாவட்ட செயலாளர் பி.காணிக்கை ராஜ், பொருளாளர் எம்.ஆரோக்கியசாமி, மாவட்ட நிர்வாகிகள் சங்கர், ஷேக் அகமது உஸ்மான் உசேன், ரமேஷ், ஹரிகேசவன், ரவி சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் அன்பு, செங்குட்டுவன், த.முருகேசன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.தமிழ்செல்வி ஆகியோர் பங்கேற்றனர். இதே போல் செங்கிப்பட்டியிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.