tamilnadu

img

போக்குவரத்து சம்மேளன மாநில மாநாடு தோழர் உமாநாத் நினைவு ஜோதி கரூரிலிருந்து நெல்லை புறப்பட்டது

கரூர், ஜூலை 16- தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் (சிஐடியு) 14-வது மாநில மாநாடு  ஜூலை 21 முதல் 23 வரை திருநெல்வேலியில் நடை பெறுகிறது.   தோழர் ஆர்.உமாநாத் நினைவு ஜோதி கரூரில் இருந்து கொண்டு செல்லப்படுகிறது. இந்த நினைவு ஜோதி பயண துவக்க விழா தமிழ்நாடு அரசு போக்குவரத்து கரூர் மண்டல அலுவலகம் முன்பு  நடைபெற்றது. விழாவிற்கு கிளை தலைவர் வி.பால சுப்ரமணியன் தலைமை வகித்தார். பயணக் குழு தலைவர் டி.சீனிவாசன், சிஐடியு சங்க மாவட்டச் செயலாளர் சி.முருகேசன், போக்குவரத்து மத்திய சங்க துணைத் தலைவர்கள் ஆர்.சிவக்குமார், ஆர்.கே.ரமேஷ் ஆகி யோர் சிறப்புரையாற்றினர். தோழர் உமாநாத்தின் நினைவுச் சுடரை சிஐடியு சங்க மாவட்டச் செய லாளர் சி.முருகேசன், போக்குவரத்து சங்க கிளை செயலாளர் சிறுமன்ன னிடம் வழங்கினார். இதில் போக்கு வரத்து ஓய்வூதியர் சங்க நிர்வாகி கந்த சாமி, கிளை நிர்வாகிகள் ராம கிருஷ்ணன், செந்தில்குமார், ராஜேஷ், கருப்பையா, பக்ரூதின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.