கரூர் கூட்ட நெரிசல் வழக்கில், விசாரணை அதிகாரியாக கூடுதல் எஸ்.பி பிரேமானந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கரூரில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், 10 குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்துள்ளனர். கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பான வழக்கில், விசாரணை அதிகாரியாக ஏற்கனவே டிஎஸ்பி செல்வராஜ் விசாரணை அதிகாரியாக இருந்த நிலையில , தற்போது புதிய விசாரணை அதிகாரியாக கூடுதல் எஸ் பி பிரேமானந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.