புதுதில்லி:
இந்தியாவின் பொருளாதாரம் மோசமான நிலையில் இருப்பதாக, உள்நாட்டு தரமதிப்பீட்டு நிறுவனமான “இக்ரா” கூறியுள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம், 2021-ஆம் நிதியாண்டில் வெகுவாக சரியும் என்றும் அது மதிப்பிட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சியை1 சதவிகிதம் முதல் மைனஸ் 2 சதவிகிம் வரை “இக்ரா”கணித்திருந்தது.தற்போது அதனை, 2021-ஆம் நிதியாண்டின் முதல் மற்றும் இரண்டாவது காலாண்டுகளில் முறையே -25 சதவிகிதம் மற்றும் -2.1 சதவிகிதம் என்று கணிசமாக குறைத்துள்ளது.இதற்கு முன்பு, 2020-21ஆம் நிதியாண்டின் முதல்காலாண்டில் 16 சதவிகிதம் முதல் மைனஸ் 2 சதவிகிதம் வரையில் ஜிடிபி வீழ்ச்சி இருக்கலாம் என்றும், இரண்டாவது காலாண்டில் 2.1 சதவிகிதமாக வளர்ச்சி இருக்கும் என்றும் இக்ரா கணித்திருந்தது. தற்போது அதனை மைனஸ்2.1 சதவிகிதமாக குறைத்துள்ளது.இரண்டு காலாண்டுகளாக நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து மந்த நிலையிலேயே இருக்கிறது என்பதைக் காட்டியிருக்கும் “இக்ரா”வின் அறிக்கை, மூன்றாவது காலாண்டில் 2.1 சதவிகிதம் என்ற அளவிற்கு மிதமான வளர்ச்சியை நோக்கிச் செல்லும், நான்காவது காலாண்டில்
அது 5 சதவிகிதமாக உயரும் என்று ஆறுதலும் அளித் துள்ளது.