பெங்களூரு:
கர்நாடக சட்டமன்றத்தில் திங்களன்று (ஜூலை 29) முதல்வர் எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப் பில் வெற்றிபெற்றார். அவர் வெற்றிபெற்ற பின்னர் சபாநாயகர் ரமேஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.ஒரு மாத காலத்துக்கும் மேலாக நடைபெற்றுவந்த கர்நா டக அரசியல் நெருக்கடியால் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசின் முதல்வர் குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜூலை 23 ஆம் தேதி தோல்வியடைந்தார்.இதையடுத்து கர்நாடகத்தில் பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவரான எடியூரப்பா ஜூலை 26 ஆம் தேதி முதல்வராக பதவியேற்றார். இந்நிலையில் எடியூரப்பா தனது பெரும்பான்மை யை சட்டமன்றத்தில் ஒரு வாரத்துக்குள் நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் கோரியிருந்தார்.
அதன்படி திங்களன்று (ஜூலை 29) கர்நாடக சட்டமன்றத்தில் தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதல்வர் எடியூரப்பா முன் மொழிந்தார். அப்போது பேசிய அவர், ‘‘மறப்போம், மன்னிப்போம் என்ற அடிப்படையில் நாம் அனை வரும் செயல்பட வேண்டும். பழிவாங்கும் அரசியலை கைவிட்டு ஆக்கப்பூர்வமான அர சியலில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறினார்.
நம்பிக்கை வாக்கெடுப்பின் மீது உரையாற்றிய சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சித்தரா மையா, “இந்த அரசு, அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிராக அமைந்த அரசு. மக்கள் தீர்ப்புக்கு எதிரான அரசு. உங்களுக்கும் (எடியூரப்பா) அதிருப்தி யாளர்கள் முளைப்பார்கள். உங்கள் அரசும் நிலையற்ற அரசே” என்று கூறினார்.பின் நம்பிக்கை தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. காங்கிரஸ், மஜத கட்சியினர் டிவிஷன் முறை வாக்கெடுப்பு கோரவில்லை. எனவே குரல் வாக்கெடுப்பே நடைபெற்றது. ஞாயிறன்றே 17 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு விட்ட நிலையில், பாஜக 105 உறுப்பினர்களைப் பெற்று வெற்றிபெற்றது.நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு வெற்றியை அறிவித்த சில நிமிடங்களில் சபாநாயகர் ரமேஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.