சண்டிகர்:
2 நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிராவில் தேர்தல் பிரச்சாரம் செய்த உத்தரப்பிரதேச பாஜக துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா, “சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும், பாகிஸ்தான் மீது போடப்படும் ஒவ்வொருஅணுகுண்டு என்பதை மக்கள் மறந்துவிடக் கூடாது” என்று மத அடிப்படையிலான தேசியவெறியைக் கிளப்பியிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்நிலையில், பிரதமர் மோடியும் பாகிஸ்தானை குறிவைத்து தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளார். ஹரியானா மாநிலம், சர்க்கி தாத்ரி நகரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசியிருக்கும் மோடி, பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் சிந்து ஆற்றின் தண்ணீரை நிறுத்தப் போவதாக கூறியுள்ளார்.கடந்த 70 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு தண்ணீர் வழங்கிக் கொண்டிருப்பதாகவும், ஆனால், இந்த தண்ணீர் ஹரியானா விவசாயிகளுக்கும், இந்தியாவுக்கும்சொந்தமானது என்றும் மாநில வெறியைத் தூண்டிவிட்டுள்ளார்.“இனிமேல் பாகிஸ்தானுக்கு தண்ணீர் வழங்கப்போவதில்லை. அவற்றை நிறுத்தும் பணிகள் தொடங்கி விட்டன. இனி பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீர் ஹரியானாவுக்கு திருப்பி விடப்படும்; அதற்கு முன்னதாக ஹரியானாவில் மீண்டும்பாஜகவை ஆட்சியில் அமர்த்த வேண்டும்”என்றும் வாக்காளர்களிடம் பேரம் பேசியுள்ளார்.