tamilnadu

img

மோடியைப் போல நான் பிரியாணி சாப்பிடவில்லை..

பெங்களூரு:

திப்பு சுல்தான் நினைவு தினத்தையொட்டி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில், பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். “அடிமையாக வாழ விரும்பாமல் போராடி மடிந்தவர் திப்பு சுல்தான்; அவர் விடுதலையையே விரும்பினார்; அதனால் அவரை நான் நேசிக்கிறேன்” என்று அந்த பதிவில் அவர் கூறியிருந்தார்.


இதை தனது பக்கத்தில் ட்வீட் செய்த பாஜக எம்.பி சந்திரசேகர், அதில், கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவை வம்புகிழுத்தார். “சித்தராமையா அவர்களே உங்கள் நேரம் வந்து விட்டது; நீங்களும் இம்ரான் கானை ஆரத் தழுவிக்கொள்ளுங்கள். அதன் மூலம் ராகுல் காந்தி மற்றும் பிரியங்காவின் அன்புக்கு ஆளாவீர்கள்” என்று சீண்டினார்.

சித்தராமையா கர்நாடக முதல்வராக இருந்தபோது, மாவீரன் திப்பு சுல்தான் ஜெயந்தியை அரசு விழாவாக மிக விமரிசையாக கொண்டாடினார். இதனை சுட்டிக்காட்டியே பாஜக எம்.பி. மேற்கண்டவாறு கூறியிருந்தார்.


ஆனால், சித்தராமையா கொஞ்சமும் அசராமல், பாஜக-வினர் பாணியிலேயே சந்திசேகர் உள்ளிட்ட பாஜக-வினருக்கு பதிலடி கொடுத்துள்ளார். “உங்கள் தலைவரைப் (மோடி) போல எதிரி நாட்டினருடன் அமர்ந்து நானொன்றும் பிரியாணி சாப்பிடவில்லை; எதிரிகளுக்கு தலை வணங்க மறுத்தவரை (திப்புவை) தான் புகழ்ந்தேன்; தலைவருக்கு அடிமைகளாக இருக்கும் உங்களைப் போன்றவர்கள், என்னைப் பற்றி கவலைப்பட வேண்டாம்” எனக் கூறியுள்ளார்.


பிரதமர் மோடி பிரதமரான நேரத்தில், எந்த அறிவிப்பும் இல்லாமல் திடீரென பாகிஸ்தான் சென்று, அன்றைய பிரதமர் நவாஸ் செரீப் வீட்டிற்குச் சென்று பிரியாணி சாப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.